• Fri. Oct 10th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

வாரிசு படத்தின் மூலம் அரசியல் நடத்திய தில்ராஜு

Byதன பாலன்

Dec 25, 2022

விஜய், ரஷ்மிகா மந்தனா, பிரகாஷ்ராஜ், ஷாம் ஆகியோர் நடித்துள்ளவாரிசு திரைப்படம் அறிவிக்கப்பட்ட நாள் முதல் இன்றுவரை அப்படம் பற்றிய செய்திகளை வெளியிட்டு வந்தன ஊடகங்கள் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது பொதுவாக சினிமா சம்பந்தபட்ட விழாக்களுக்கு சினிமா பத்திரிகையாளர்கள், தொலைக்காட்சி, இணைய தள செய்தியாளர்களுக்கு அழைப்பிதழும் நிகழ்ச்சிக்கான பாஸ் வழங்கப்படுவது வழக்கம் ஆனால் நேற்றைய நிகழ்ச்சிக்கு வழங்கப்படவில்லை
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படங்கள்,சன் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிப்பரப்பாக கூடிய சினிமா விழாக்களுக்கு நீண்டகாலமாக இந்த ஊடக தர்மம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கான அனுமதி அழைப்பிதழ் ஒன்று 2000 ம் ரூபாய் முதல் 20,000 ம் வரை விலைபோனது தமிழகத்தில் உள்ள சில முன்னணி ஊடகங்கள் வாரிசு இசை வெளியீட்டு நிகழ்வுகளை உடனுக்குடன் வெளியிடுவதற்காக நுழைவு சீட்டை விலைக்கு வாங்கி தங்களது உளவாளிகளை நிகழ்ச்சிக்கு அனுப்பினார்கள் இன்று அதிகாலை வரை இசை வெளியீட்டு விழா செய்திகள் இணையத்தில் பரவிக் கிடக்கிறது.
இதைத்தான் தயாரிப்பாளரும், சன் தொலைக்காட்சி தரப்பில் எதிர்பார்த்ததாகவும் எதிர்பார்த்ததை காட்டிலும் செய்திகள் அதிகமாக வெளியானது என்கிறது தயாரிப்பாளர் தரப்பு.வாரிசு படம் பற்றிய அறிவிப்பு வெளியானது முதல் இன்றுவரை ஊடகங்களில் அப்படம் பற்றிய பரபரப்பு செய்திகள் தொடர்ந்து வர தெலுங்கு தயாரிப்பாளர் தில்ராஜ் திட்டமிட்டு செயலாற்றி வருகிறார். தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் மூவீஸ் இல்லாமல் அதிக திரையரங்குகளில் படத்தை ரீலீஸ் செய்ய முடியாது என்பது தெரிந்தும் படத்தின் தமிழக உரிமையை விஜய் நடிக்கும் அடுத்த படத்தை தயாரிப்பவரும் அவருக்கு நம்பிக்கைக்குரிய லலிக்குமாரை வாங்க வைத்தார்.


ரெட் ஜெயண்ட் உடன் நெருக்கமான வணிகஉறவில் இருக்கும் லலித்குமார் தமிழக உரிமையை வாங்குவார் என்பது எதிர்பாராதது ஏனென்றால் ரெட் ஜெயண்ட் மூவீஸ் துணிவு படத்தை தமிழ்நாட்டில் வெளியிடுவதால் வாரிசு படத்திற்கு அதிகமான திரையரங்குகள் கிடைக்காது என்பது தெரியும் அதனை எளிதாக சமாளிக்ககூடியவர் மாஸ்டர் படத்தின் தயாரிப்பு, வெளியீட்டை கொரோனா நெருக்கடியில் பதட்டமின்றி சமாளித்தவர் லலித்குமார் அதனால்தான் வாரிசு படத்தை தமிழகத்தில் வெளியிடும் உரிமையை அவரிடம் வழங்கினார். தில்ராஜு தனியார் சேனல் ஒன்றுக்கு கொடுத்த பேட்டியில் தமிழ்நாட்டில் விஜய்தான் நம்பர் ஒன் நடிகர் அவர் நடித்துள்ள வாரிசு படத்திற்கு போதுமான திரையரங்குகள் கிடைக்கவில்லை இது சம்பந்தமாக உதயநிதியை சந்தித்து பேச உள்ளேன் என்று கூறும் வரை தமிழ்நாட்டில் “துணவு” படத்திற்கு தான் அதிக திரையரங்குகள் என்கிற நிலை இருந்தது. ஆனால் அவரது பேட்டிக்கு பின் எல்லாமே மாறியது ரெட் ஜெயண்ட் நிறுவனத்திற்கு தமிழகத்தில் உள்ள 9 விநியோக மாவட்டங்களில் ஐந்து பிரதான விநியோக மாவட்டங்களான சென்னை, செங்கல்பட்டு, கோயம்புத்தூர், வேலூர், பாண்டிச்சேரிஆகிய பகுதிகளில் திரையரங்கை ஒப்பந்தம் செய்யும் பொறுப்புரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்திற் க்கு வழங்கப்பட்டது அதனால் மற்ற மாவட்டங்களானமதுரை, திருநெல்வேலி, சேலம், திருச்சி மாவட்டங்களிலும் வாரிசு படத்திற்கு போதுமான திரையரங்குகள் கிடைக்க காரணமானது.ரெட் ஜெயண்ட் மூவீசுடன் லலித்குமாருக்கு சுமுக வணிக உறவு இருப்பதால் இதனை சாத்தியமாக்கினார் தில்ராஜு
விஜய் மனம் குளிர அவர் கொண்டாடும் கிறிஸ்துமஸ் பண்டிகை பரிசாக சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்தி விஜய்கால் சீட் ஒன்றையும் பெற்று விட்டார் அதனால்தான் ” வாரிசுக்கு வாழ்த்துகள் வாரிசு – 2 எப்போது என தில்ராஜீவை பார்த்து விஜய் கேட்டுள்ளார் அரசியல் சதுரங்க விளையாட்டுக்கு சற்றும் குறைவில்லாத வகையில் “வாரிசு” படத்தின் மூலம் சினிமா வியாபார அரசியலை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ளார் தில் ராஜீ