• Fri. Sep 12th, 2025
WhatsAppImage2025-08-28at1013221
WhatsAppImage2025-08-28at101324
WhatsAppImage2025-08-28at1013171
WhatsAppImage2025-08-28at101323
WhatsAppImage2025-08-28at101320
WhatsAppImage2025-08-28at101321
WhatsAppImage2025-08-28at101322
WhatsAppImage2025-08-28at101317
WhatsAppImage2025-08-28at1013191
previous arrow
next arrow
Read Now

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயன்பாட்டுக்கு வந்த டிஜிட்டல் லாக்கர் வசதி

Byவிஷா

Mar 5, 2025

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிளின் உடைமைகளைப் பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் லாக்கர் வசதி பயன்பாட்டுக்கு வந்துள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நாட்டின் பழமையான ரயில் நிலையங்களில் ஒன்று, சென்னை சென்ட்ரல் டாக்டர் எம்ஜிஆர் ராமச்சந்திரன் ரயில் நிலையம், இது சுமார் 150 ஆண்டுகள் பழமையானது. இங்கு வந்துசெல்லும் ரயில்கள் மூலம் நாள் ஒன்றுக்கு பல லட்சம் பேர் வந்து சென்று கொண்டிருக்கின்றனர். இதனால், சென்ட்ரல் ரயில் 24மணி நேரமும் பரபரப்புடன் காணப்படும். ஆனால், இங்கு வரும் பயணிகள் அவசர தேவைக்காக பொருட்களை பாதுகாக்க பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வந்தனர். இதையடுத்து, நவின முறையிலான பொருட்கள் பாதுகாப்பு அறையை இந்தியன் ரயில்வே அமைத்து வந்தது. இந்த அறை தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதன் மூலம் பயணிகளின் லக்கேஜ் பாதுகாப்பு சிரமத்திற்கு தீர்வு காணப்பட்டு உள்ளது.
அதன்படி, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகள் பாதுகாப்புக்கான இந்த டிஜிட்டல் லாக்கர் அறை வசதி, ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதுபோன்ற வசதிகள் இதுவரை விமான நிலையங்களில் மட்டுமே இருந்து வந்த நிலையில், தற்போது சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. இது தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளது.
பிளாட்பார்ம் 2-ல் அமைக்கப்பட்டுள்ள இந்த டிஜிட்டல் லாக்கர் அறையில் நடுத்தரம், பெரியது, மிகப்பெரியது என மூன்று விதமான லாக்கர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த லாக்கர்களின் பயன்பாட்டுக்கு காலநேரத்தை அடிப்படையாகக் கொண்டு கட்டணத் திட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டு உள்ளன.
மொத்தம் 84 லாக்கர் பெட்டிகள் இங்கு உள்ளது. சன் மோட்டர் பார்ட்ஸ் என்ற ஒப்பந்ததாரருக்கு 3 ஆண்டு ஒப்பந்தம் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் 84 லாக்கர்கள் உள்ளன. இங்கு நடுத்தரம், பெரியது, மிகப்பெரியது என 3 வகைகளில் லாக்கர் அறைகள் உள்ளன.

மொத்தமாக 84 லாக்கர்கள் இந்த வசதியில் செயல்படுகின்றன. பயணிகள், கியூ-ஆர் கோடு ஸ்கேன் செய்வதன் மூலம் இவ்வசதியைத் தங்களின் செல்போன் வழியாக மட்டுமே பயன்படுத்த முடியும்.
தேவையான லாக்கரை தேர்வு செய்து, அதற்கான கட்டணத்தை செலுத்தியதும் பயனர்கள் தங்கள் லக்கேஜ்களை பாதுகாப்பாக வைக்கலாம்.
நடுத்தர வகை லாக்கர்களில் பொருட்களை வைக்க 3 மணி நேரத்துக்கு ரூ.40 கட்டணம் ஆகும். 6 மணி நேரத்துக்கு ரூ.60 ம் 9 மணி நேரத்துக்கு ரூ.90-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
பெரிய வகை லாக்கர்களுக்கு 3 மணி நேரத்துக்கு ரூ.50, 6 மணி நேரத்துக்கு ரூ.80, 9 மணி நேரத்துக்கு ரூ.120-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
மிகப்பெரிய லாக்கர் பெட்டிகளுக்கு 3 மணி நேரத்துக்கு ரூ.60, 6 மணி நேரத்துக்கு ரூ.100, 9 மணி நேரத்துக்கு ரூ.150-ம் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதேபோல ஒரு நாளைக்கு டிஜிட்டர் லாக்கர் பெட்டியை பயன்படுத்த நடுத்தர பெட்டிகளுக்கு ரூ.120, பெரிய பெட்டிகளுக்கு ரூ.160, மிகப்பெரிய பெட்டிகளுக்கு ரூ.200 கட்டணமாகும்.
இந்த புதிய வசதி ரயில் பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்திய ரயில்வே வாரியம் வெளியிட்ட நிதி ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியலில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், வருவாய் ஈட்டலில் 3-வது இடத்தை பிடித்து முன்னிலையில் திகழ்கிறது. இந்திய ரயில்வேயின் முக்கிய போக்குவரத்து மையங்களில் ஒன்றான இந்த ரெயில் நிலையத்தின் வளர்ச்சி மற்றும் அதன் பாரம்பரியம் நாட்டிற்கு பெருமை சேர்க்கிறது.