• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

திண்டுக்கல்லில் டிஜிட்டல் அரெஸ்ட் ஒருவர் கைதுரூ.9 லட்சம் மீட்பு..,

ByS.Ariyanayagam

Jul 10, 2026

திண்டுக்கல்லில் டிஜிட்டல் அரெஸ்ட் சம்பந்தமாக 9 லட்சம் பறிப்பு நடந்தது.
இதில் ஒருவர் கைது செய்யப்பட்டார். ரூ 7 லட்சம் மீட்கப்பட்டது.
திண்டுக்கல்லை சேர்ந்த பெண்ணின் செல்போனுக்கு மர்ம நபர் தொடர்பு கொண்டு தன்னை சென்னை காவல் அதிகாரி என்று கூறி அந்தப் பெண்ணின் ஆதார் அட்டையை பயன்படுத்தி சிம்கார்டு வாங்கி தீவிரவாதிகள் பயன்படுத்துவதாகவும், இது தொடர்பாக தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்தப் பெண்ணை டிஜிட்டல் அரெஸ்ட் செய்துள்ளதாகவும் கூறி பெண்ணின் வங்கி கணக்கில் இருந்த ரூ.9 லட்சம் பணத்தை வேறொரு வங்கி கணக்கிற்கு மாற்றி மோசடி செய்தது.

தொடர்பாக அளித்த புகாரின் பேரில் மாவட்ட S.P. ஜெயக்குமார் உத்தரவின் பேரில் சைபர் கிரைம் ADSP.தெய்வம் தலைமையிலான போலீசார் தொழில்நுட்பம் உதவியுடன் தீவிர விசாரணை மேற்கொண்டு மோசடியில் ஈடுபட்டு பெங்களூருவில் பதுங்கி இருந்த அபித்அலிபேக் மகன் பர்தீன்அப்பாஸ்(20) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து ரூ.7 லட்சம் பணத்தை மீட்டு திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.