காரியாபட்டி – ஆக.2 காரியாபட்டி வட்டாரத்தில் மாநில சாலை பகுதியில் உள்ள நிர்வழிப்பாதைகளில தூர்வாரும் பணிகள் துவங்கப்பட்டது. மாநில நெடுஞ்சாலை பகுதியில் இருக்கும் நீர்வழிப் பாதைகளில் முட்புதர்கள் மற்றும் , குப்பைகளால் மூடிக்கிடக்கின்றன. இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் வேகமாக செல்ல முடியாமல் தேங்கி விடுகின்றன. இதையடுத்து மாவட்ட நெடுஞ்சாலை துறையினர் மாநில சாலையில் உள்ள நிர்வழிப்பாதை பகுதிகளை தூர்வாரும் பணி மேற்கொள்ள முடிவு செய்தனர். அதன்படி அருப்புக் கோட்டை உட்கோட்டம் காரியாபட்டி பிரிவு பகுதியில் உள்ள நீர்வழி பாதையில் தூர்வாரும் பணி துவங்கப் பட்டது. முதற்கட்டமாக காரியாபட்டி கல்குறிச்சியில் உதவி கோட்டப் பொறியாளர் முத்துச் சாமி, உதவி பொறி யாளர் பெரிய திருமால் முன்னிலையில் தூர்வாரும் பணி துவங்கப் பட்டது. இந்த பணி செப்டம்பர் மாதம் இறுதி வரை நடை பெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

