• Fri. Apr 19th, 2024

குமரிக்கு வரும் உலகின் பல்வேறு வகை பறவைகள்.திரும்பி செல்கிறது தாயும், பிள்ளையும்மாக

நாகர்கோவிலில் ஆட்சியர் அலுவலக நாஞ்சில் அரங்கில் கடந்த (மே10)ம் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். நிகழ்வில் குமரியின் அமைச்சரான மனோ தங்கராஜ் பங்கு பெற்று.குமரிமாவட்ட வனத்துறையும், மும்பை இயற்கை வரலாற்று கழகமும் இணைந்து தயாரித்த.குமரி மாவட்ட உப்பளம் பறவைகள் பற்றிய ஆராய்ச்சி குறிப்பு புத்தகத்தை அமைச்சர் மனோ தங்கராஜ் வெளியிட்டார். இந்த நிகழ்வில் மும்பை இயற்கை வரலாற்று கழக இணை இயக்குநர் முனைவர் பாலசந்திரன்,குமரி மாவட்ட வனத்துறை அதிகாரி இளையராஜா ஐ எப் எஸ், குமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத் ஐ பி எஸ், கன்னியாகுமரியை சேர்ந்த பறவை ஆராய்ச்சியாளர் சுதாமதி ஆகியோர் பங்கேற்றனர். குமரிக்கு எத்தனை காலமாக வெளிநாடுகளில் இருந்து என்னென்ன வகை பறவைகள் வருகின்றன.? குமரிக்கு வருவதற்கான அடிப்படை காரணங்கள் எவை,எவை என மும்பை இயற்கை வரலாற்று கழக இணை இயக்குநர் முனைவர் பாலசந்திரனிடம் செய்தியாளர்களின் கேள்விக்கு கிடைத்த தகவல்கள். கடந்த 25ஆண்டுகளுக்கு முன்பிருந்தே உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள பல வகை பறவைகள் குமரிக்கு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளது.


உலகின் பல்வேறு நாடுகளில் ஏற்படும் கால நிலை மாற்றத்தின் போது குமரி மாவட்டத்தில் உள்ள மாறுபட்ட கால நிலை, இங்கு 700_ஏக்கர் பரப்பளவில் உள்ள உப்பளங்களில் வெளிநாட்டு பறவைகள் தங்குவதற்கான ஏற்ற காலச்சுழல் மட்டும் அல்லாது பலவகை பறவைகளின் இன விருத்திக்கும் ஏற்ற சுழலால். உலகின் பல நாடுகளில் இருந்து தனியாக இங்கு வரும் பல இன பறவைகள் அதன், அதன் குஞ்சுகள் உடன் அதனது தாயகத்திற்கு திரும்பி செல்வது. குமரியில் இயற்கை வளத்தினுடன்.பறவைகள் குஞ்சு பொரிக்கும் நிலைக்கு ஏற்றக் காலம் என்பது தான் இயற்கையின் ஒரு உன்னதமான அதிசயம்.
இந்தியாவின் தென்கோடியில் உள்ள குமரி கடற்கரையில் அமைந்துள்ளதால் பூமியின் வட பாதியிலுள்ள ஆர்டிக் பகுதியிலிருந்தும், மத்திய மேற்காசிய நாடுகளிலிருந்தும் பறவைகள் பூமியின் தென்பகுதியில் உள்ள வெப்ப நாடுகளுக்கு வலசை செல்லும் போது குமரி உப்பளங்களில் வந்து தங்கி ஓய்வெடுக்கிறன. நெடுந்தூர பயணத்திற்கான சக்தியை சேமித்து விட்டு வேனீற்காலம் தொடங்கியதும் அதன், அதன் பிறப்பிடமான ஆர்டிக் பகுதிகளுக்கு திரும்பி செல்கின்றன.


குமரி மாவட்ட உப்பளங்களுக்கு இந்தியாவில் காணப்படும் அனைத்து நீர்ப்பறவை குழுக்களையும் சேர்ந்த பறவைகள் வந்துச் செல்கின்ற. இங்கு 60_வகையான வலசை வரும் பறவைகள் ஆண்டொன்றுக்கு இரண்டு லட்சம் பறவைகள் வந்து ஒய்வு மற்றும் சில வகை பறவைகள் அதனது இன் விருத்தியின் காலமாகவும் இருக்கிறது. இதில் அதிக எண்ணிக்கையில் ஆலாக்கள்(10 இனங்கள்) வருகை புரிகின்றன.இதில் மூன்று வகையான ஆலாக்கள் பல்லாயிர கணக்கில் வருகின்றன.இதை கடந்த 30_ஆண்டுகளாக மும்பை நேசுரல் ஹிஸ்டரி சொசைட்டி கண்காணித்து வருகிறது என தெரிவித்தார். குமரியை சேர்ந்த பரவை ஆர்வலர் மற்றும் ஆராய்ச்சியாளருமான சுதாமதி நம்மிடம் தெரிவித்த தகவல்கள்.குமரி பகுதி உப்பளங்களுக்கு 25_வருடங்களுக்கு முன்பே சிறிய எண்ணிக்கையில் வர தொடங்கிய பூ நாரைகள் இப்போது பல ஆயிரங்களில் வந்து செல்கின்றன. ஆர்டிக் பகுதியிலிருந்து வலசை வரும் உள்ளான்கள் என்று அழைக்கப்படும் 28_வகையான கரையோர பறவைகள் மற்றும் 6_வகையான வாத்து இனங்களும் இந்த உப்பளங்களுக்கு ஆண்டு தோறும் வருகிறது.
தமிழக அரசு கீழ மணக்குடி, புத்தளம், சுசீந்திரம்,தேரூர் நீர் நிலை பகுதிகளை பறவைகள் சரணாலயம் ஆக அறிவித்துள்ளது.இதன் மூலம் பறவைகளை வேட்டையாடுவது முழுமையாக தடுக்கப்பட்டுள்ளது. குமரிக்கு வரும் உலக பறவைகள் பாது காப்பாக தங்கி அதன்,அதன் இன் விருத்தியுடன் தாயகத்திற்கு திரும்பும் சூழலை தமிழக அரசின் கண் காணிப்பில் செயல்படுவது.குமரியிலுள்ள பறவை ஆர்வலர்களுக்கு உற்சாகம் தருகிறது எனவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *