திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு ஒன்றிய அதிமுக சார்பில் பூத்து கமிட்டி ஏஜெண்டுகள் ஆலோசனைக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
காலை 11:00 மணிக்கு முன்னாள் அமைச்சர் வந்து பேசுவார் என அதிமுக நிர்வாகிகள் மற்றும் பூத்து கமிட்டி ஏஜெண்டுகள் காத்திருந்த வேளையில் மதியம் ஒரு மணிக்கு நத்தம் விசுவநாதன் மேடை ஏறி பேசினார்.
முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் பேச ஆரம்பித்த சில நிமிடங்களில் அவரின் பேச்சைக் கேட்காமல் கூட்டத்தில் அமர்ந்திருந்த அதிமுகவினர் கொத்தாக கிளம்பி சாப்பாட்டு அரங்கிற்குள் நுழைந்தனர்.

மேடையில் இருந்த அதிமுக நிர்வாகிகள் சாப்பிட சென்றவர்களை மீண்டும் அமரச் சொல்லி அழைத்தபோதும் யாரும் அதை காதில் வாங்கிக் கொள்ளவில்லை.
இறுதியில் கடுப்பான நத்தம் விஸ்வநாதன் கூட்டத்திற்கு வந்தீர்களா? சாப்பிட வந்தீங்களா? என எரிச்சலாக மைக்கில் பேசினார்.
குறிப்பிட்ட நேரத்திற்குள் வந்து கூட்டத்தில் பேசி இருக்கலாம் பசியோடு எவ்வளவு நேரம் நாங்கள் காத்திருப்போம் என அதிமுக பூத் கமிட்டி ஏஜெண்டுகள் புலம்பி கொண்டே சென்றனர்.