இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சென்னை கிண்டி நட்சத்திர விடுதியில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்த உண்மை செய்தி தமிழகம் முழுவதும் தெரிந்திருக்கும் நிலையில், கன்னியாகுமரியில் இன்று (ஏப்ரல்_6) சூரியன் உதிக்கும் நேரத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கன்னியாகுமரி பகவதியம்மனை தரிசித்ததாகவும், கன்னியாகுமரியில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ரகசியமாக தங்கியிருப்பதாகவும், தகவல் இரக்கை கட்டி பரவி வருவதில் அதிமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எடப்பாடியுடன் கருத்து வேறுபாடு மற்றும் பாஜகவுடன் நெருங்கிய தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது. சென்னையில் நிர்மலா சீதாராமனை சந்தித்ததாகவும், தற்போது கன்னியாகுமரி பகவதி அம்மனை தரிசிக்க வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்த போது. செங்கோட்டையனை ஒரு வழக்கு சம்பந்தமாக நாகர்கோவிலில் தங்கி தினம் கோட்டாறு காவல் நிலையத்தில் கையெழுத்து போட்டு அந்த குறிப்பிட்ட வழக்கின் காலத்தில், நாகர்கோவிலில் செங்கோட்டையனுக்கு உதவியாக இருந்த கட்சிக்காரர் யார்? என அதிமுகவினர் ஒரு விசாரணையில் இறங்கியுள்ளார்கள்.
இந்த சிதம்பர ரகசியம் தெரிந்த அதிமுக கட்சியினர் யார்.!?