• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

கமலுடன் நடிக்க மறுத்தாரா கார்த்தி?

நடிகர் கமல்ஹாசன் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள விக்ரம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் விஜய்சேதுபதி, பஹத் பாசில், நரேன் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் வருகின்ற ஜூன் மாதம் 3 -ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்நிலையில், விக்ரம் படத்தில் இறுதி காட்சி ஒன்றில் நடிக்க நடிகர் கார்த்தியிடன் லோகேஷ் கனகராஜ் கேட்டுள்ளாராம். ஆனால் கார்த்தி கால்ஷீட் காரணமாக மறுத்துவிட்டாராம்.

இதனால் லோகேஷ் கனகராஜ் கைதி படத்தில் எடுத்த சில காட்சிகளை விக்ரம் படத்தில் இணைக்க முடிவு செய்து கமல்ஹாசனிடம் கேட்டுள்ளாராம். அதற்கு கமல் மறுத்துவிட்டு அமிதாப் பச்சனிடம் அந்த காட்சியை நடிக்க கேட்க உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன..