• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

புகழ்பெற்ற கார்மல் கார்டன் பள்ளியின் வைர விழா

BySeenu

Jan 8, 2025

புகழ்பெற்ற கார்மல் கார்டன் பள்ளியின் வைர விழா கொண்டாட்டம் நிகழ்வு ஜனவரி 10 மற்றும் 11-ம் தேதி நடைபெறுகிறது.

புகழ்பெற்ற கார்மல் கார்டன் பள்ளியின் வைர விழா கொண்டாட்ட நிகழ்வு வரும் ஜனவரி 10 மற்றும் 11-ம் தேதி கோவை சுங்கம் பகுதியில் உள்ள கார்மல் கார்டன் பள்ளி வளாகத்தில் கொண்டாடப்பட உள்ளது.

இதுகுறித்து பள்ளியின் தாளாளரும் முதல்வருமான அருள் தந்தை ஆரோக்கிய தடயூஸ் மற்றும் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சங்கத் தலைவர் டி. நந்தகுமார் ஆகியோர் கூறியதாவது :-

கடந்த 1964-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் தேதியில் அப்போதைய கோவை ரோமன் கத்தோலிக்க மறை மாவட்ட ஆயர் மேதகு பிரான்சிஸ் சவரிமுத்து அவர்களால் ஆண்களுக்கான முதல் பதின்ம பள்ளியாக கோவை மாவட்டத்தில் துவக்கப்பட்டது தான் கார்மல் கார்டன் மெட்ரிகுலேஷன் ஹயர் செகண்டரி ஸ்கூல்.

இப்பள்ளி 1966-ம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டது. 1969 மற்றும் 70-ம் ஆண்டு பழைய முறைகளின் படி 11-ம் வகுப்பு தொடங்கப்பட்டு 100 சதவீத தேர்ச்சியைப் பெற்றுத்தந்தது. 1978-ம் ஆண்டு இப்பள்ளி மேல்நிலைப் பள்ளியாக உயர்த்தப்பட்டது. 1980-ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் குழுவே 100 சதவீத தேர்ச்சியை பெற்று சாதனை படைத்தது. 1981-ம் ஆண்டு கார்மல் மழலையர் பள்ளி துவக்கப்பட்டது.

இப்பள்ளி 1989 – 1990-ம் வருடம் வெள்ளிவிழா கொண்டாடடியது. இதன் தொடர்ச்சியாக 2014 – 2015-ம் ஆண்டு பொன்விழா கொண்டாடியது. தற்போது 2024 – 2025-ம் ஆண்டு வைர விழா கொண்டாடப்பட உள்ளது. இப்பள்ளியின் ஆசிரியர்கள் குழு பல்வேறு வெற்றிகளை தொடர்ச்சியாக பெற்றுக் கொடுத்தது. இப்பள்ளியில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு அரசு விதிகளின் படி ஓய்வு ஊதியம் வழங்கப்பட்டு வருகின்றது என்பது பெருமைக்குரிய விசயமாகும்.

இப்பள்ளியில் இதுவரை சுமார் 10,000-ற்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பயின்று இன்று உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் உள்ளார்கள். இங்கு பயின்ற மாணவ மாணவியர்கள் தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் பல அரசு துறை, தனியார் நிறுவனங்களில் முன்னணி பணியிலும் உள்ளார்கள். மேலும் பல்வேறு அமைப்புகளில் முக்கிய பொறுப்புகளிலும் உள்ளனர்.

இந்த வைர விழா ஆண்டில் எங்கள் பள்ளியில் படித்த 12 முன்னாள் மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு “ஜெம் ஆப் கார்மல்” என்ற உயரிய விருதும் வழங்கப்பட உள்ளது. மேலும் வைர விழா நிகழ்வின் ஒருபகுதியாக இப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் அருள் தந்தை முடியப்பர் ஆடிட்டோரியத்திற்கு முழுவதும் குளிர்சாதன வசதியை ஏற்படுத்தி கொடுத்துள்ளனர்.