• Mon. Nov 17th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

நாட்டுபுற கலைஞரை கௌரவித்ததருமபுர ஆதீனம்

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் விருதகிரீஸ்வரர் ஆலய குடமுழுக்கு கும்பாபிஷேக நிகழ்ச்சியில் திரைப்பட பின்னணி பாடகரும் நாட்டுப்புற இசை கலைஞருமான வேல்முருகன் அவர்களுக்கு தர்மபுரம் ஆதினத்தால் “கிராமிய இசை கலாநிதி” என்கிற பட்டம் வழங்கப்பட்டுள்ளதுடன், தர்மபுரம் அதினத்தின் ஆஸ்தான பாடகராகவும் அறிவிக்கப்பட்டுள்ளது இவருக்கு முன்பாக டாக்டர்யேசுதாஸ் அவர்கள் இந்த பொறுப்பில் இருந்து வந்தார். அவர்களுக்கு பிறகு முதல் முறையாக ஒரு நாட்டுப்புற பாடகரை தர்மபுரம் ஆதினம் சிவாலயங்களுக்கு ஆஸ்த்தானபாடகராக அறிவித்துள்ளது இதுவே முதல் முறை
தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி. வெ. கணேசன், இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் கே. பி. அசோக் குமார் ஆகியோர் முன்னிலையில் வேல்முருகன் அவர்களுக்கு “கிராமிய இசை கலாநிதி “எனும் பட்டத்தை வழங்கி தங்கப்பதக்கத்தை அளித்து தர்மபுரம் ஆதினம் நாட்டுப்புற இசை கலைக்கு ஒரு கவுரவத்தை அளித்துள்ளது.