• Fri. Aug 21st, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

தனுஷின் அடுத்த படம் ரிலீஸுக்கு ரெடி…

Byகாயத்ரி

Aug 24, 2022

சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் திருச்சிற்றம்பலம். கர்ணன் படத்திற்கு பிறகு தனுஷ் நடித்து திரையில் வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.வசூலில் இன்று வரை ரூ. 65 கோடியை கடந்துவிட்டது.

தனுஷ் நடிப்பில் அடுத்ததாக தமிழில் வெளியாகவிருக்கும் திரைப்படம் வாத்தி. வெங்கி அட்லூரி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இப்படம் உருவாகியுள்ளது. இந்நிலையில், இப்படம் வருகிற டிசம்பர் 9ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாத்தி படத்திற்கு முன்பே செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள நானே வருவேன் வெளிவரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.