• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க சென்ற பக்தர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழப்பு…

Byகாயத்ரி

Jul 15, 2022

சுவாமி தரிசனத்திற்கு சென்ற பக்தர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்காக வரிசையில் சென்றபோது நெரிசலில் சிக்கி தமிழக பக்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.காஞ்சிபுரத்தை சேர்ந்த வேதாச்சலம் என்ற 64 வயது மதிக்கத்தக்க நபர் தனது குடும்பத்தினருடன் நேற்று இரவு திருப்பதி கோவிலுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் சுவாமி தரிசனம் செய்ய வரிசையில் சென்ற போது கூட்ட நெரிசலில் சிக்கி அவர் உயிர் இழந்தார். மேலும் வைகுண்டம் காம்ப்ளக்ஸில் உள்ள 32 அறைகளும் நிரம்பியதால் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.