ராமநாதபுரத்தில் நேற்று பெய்த மழையின் காரணமாக, ராமேஸ்வரம் கோவிலுக்குள் மழைநீர் புகுந்ததால் பக்தர்கள் அவதி அடைந்தனர்.
வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அக்டோபர் 11-ம் தேதி வரை தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதிகளில் சனிக்கிழமை நள்ளிரவிலிருந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரையிலும் பரவலாக மழை பெய்தது. இதனால் பாம்பன், தங்கச்சிமடம், ராமேசுவரம் உள்ளிட்ட ஊர்களின் தாழ்வான பகுதிகள் முழுவதும் மழைநீர் தேங்கி குளம் போலக் காணப்பட்டது. மேலும், ராமநாதசுவாமி கோயிலில் அம்பாள் சன்னதியில் மழை நீர் தேங்கியதால் பக்தர்கள் சிரமப்பட்டனர். தொடர்ந்து கோயில் ஊழியர்கள் மழை நீரை அப்புறப்படுத்தினர்.
ராமேஸ்வரம் கோவிலுக்குள் மழைநீர் புகுந்ததால் பக்தர்கள் அவதி
