• Mon. Mar 30th, 2026
WhatsAppImage2026-03-25at0556534
previous arrow
next arrow
Read Now

பழனி பங்குனி உத்திரம் பக்தர்கள் பரவசம்..,

ByS.Ariyanayagam

Mar 29, 2026

பழனி பங்குனி உத்திரத்தை அடுத்து பக்தர்கள் பரவசமடைந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பங்குனி உத்திரத் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில், விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்கப் பக்திப் பாடல்கள் மூலம் இணையதளங்களில் வைரலான சிறுமி தியா பழனிக்கு வருகை தந்தார்.

பங்குனி உத்திரத் திருவிழாவின் மகத்துவத்தையும், பழனி முருகனின் சிறப்புகளையும் மிக அழகாக விளக்கிக் கூறினார். அதனைத் தொடர்ந்து, தனது இனிமையான குரலில் முருகப் பெருமானைப் போற்றிப் பக்திப் பாடல்களைப் பாடினார்.