மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சீமானூத்து, கல்லூத்து கிராமத்திற்கு பாத்தியப்பட்ட நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீதேவி பூதேவி ஸ்ரீ நிவாசப்பெருமாள் திருக்கோவிலில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை என்பதால் பெருமாளுக்கு பால், பழம், இளநீர் உள்ளிட்ட திரவியங்களை கொண்டு அபிஷேகங்கள் நடைபெற்றது.

அதனைதொடந்து அலங்காரத்தில் பெருமாள் காட்சியளிக்க ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். மேலம் கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான பூஜைகளை அர்ச்சகர் தெய்வச்சிலை செய்தார். அதே போல் உசிலம்பட்டி அருகே அயன்மேட்டுப்பட்டியில் புத்தூர் மலைஅடிவாரத்தில் ஆஞ்சநேயர் மற்றும் மலைராமர் திருக்கோவிலில் மலைராமர், ஆஞ்சநேயருக்கு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு, அலங்காரத்தில் சுவாமி காட்சியளிக்க ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.