• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

வைகாசி விசாகம் திருப்பரங்குன்றத்தில் குவியும் பக்தர்கள்

ByA.Tamilselvan

Jun 12, 2022

வைகாசி விசாகம் என்பது முருகக் கடவுள் அவதாரம் செய்த நாளாகும். வைகாசி மாதத்தில் உள்ள விசாக நட்சத்திரத்தில் வரும் சிறப்பு நாள் இதுவாகும். விசாகம் என்பது ஆறு நட்சத்திரங்கள் ஒன்று கூடியதென்றும் இதனால் முருகனும் ஆறு முகங்களோடு திகழ்பவர் என்பதும் ஐதீகம்.
இந்நாள் ஜோதி நாள் எனவும் அழைக்கப்படுவதுண்டு. உயிர்களுக்கு நேரும் இன்னலை நீக்கும் பொருட்டு சிவன் ஆறுமுகங்களாய்த் தோன்றி தம் திருவிளையாடலால் குழந்தையானது இந்நாளில். மக்கள், பிராணிகள், தாவரங்கள் எல்லாம் ஓருயிராகி இணைக்கப்பட்டிருக்கும் உண்மையை விளக்குதலே இந்நாளின் கருத்தாகும். இதனால் சைவர்கள் இந்நாளில் விரதமிருந்து ஆலயங்களில் சிறப்பாகக் கொண்டாடுவர்.
முருகன் ஆலயங்களில் விழா முருகன் அவதரித்த இந்த வைகாசி விசாக நாளில் உலகமெங்கும் இருக்கும் முருகன் கோயில்களில் இன்று சிறப்பு பூஜைகள் நடைபெறும். தமிழ்நாட்டில் அறுபடை வீடுகள் என அழைக்கப்படும் திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழநி, சுவாமிமலை, திருத்தணி, சோலைமலை ஆகிய இடங்களில் முருகப்பெருமானுக்கு காலையிலேயே சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடைபெற்றன.
ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஜூன் மாதம் 3.6 2022 முதல் ஆரம்பம் ஜூன் மாதம் 12ஆம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.இன்று வைகாசி விசாக திருநாளில் முன்னிட்டு பால்குட சண்முகப் பெருமான் வள்ளி தெய்வயானை சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது வைகாசி விசாகத்திருநாள் வசந்த மண்டபத்திற்கு தினசரி சுப்பிரமணியசாமி தெய்வயானை எழுந்தருளி மண்டபத்தில் மூன்று தரம் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். நாளை தங்கக்குதிரை வாகனத்தில் ஜூன் மாதம் 13ஆம் தேதி திங்கட்கிழமை காலை புறப்பாடு. சுப்ரமணியசுவாமி தெய்வயானை தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி மொத்த கரசி திருவிழா நடைபெறுகிறது இரவு பூப்பல்லக்கில் சுப்பிரமணியசாமி தெய்வயானை திருக்கோவிலுக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி அளிப்பர்.


கொரோனா பரவல் காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு வைகாசி விசாகம் திருவிழா நடைபெறுவதால் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலத்தில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்துள்ளனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பாத யாத்திரையாகவும் காவடி எடுத்தும் திரளான பக்தர்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளனர். பல மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.