• Wed. Jan 21st, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

எடப்பாடி தாதாபுரம் ஊராட்சி மன்ற தலைவராக வளர்மதி பதவியேற்பு…

சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியம் தாராபுரம் ஊராட்சி மன்ற தலைவருக்கான இடைத்தேர்தல் கடந்த வாரம் நடைபெற்றது. இதில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வளர்மதி வேலு வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து இன்று தாதாபுரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் வளர்மதி வேலுவுக்கு பதவி ஏற்பு விழா நடைபெற்றது.

இதில் உதவி தேர்தல் அலுவலரும், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கார்த்திகேயன் பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணத்தை செய்து வைத்தார். இந்த பதவியேற்பு விழாவில் நகரக் கழகச் செயலாளர் முருகன், முன்னாள் நகரமன்ற தலைவர் கதிரேசன், எடப்பாடி வடக்கு ஒன்றிய செயலாளர் மாதேஷ், கொங்கணாபுரம் ஒன்றிய குழு தலைவர் கரட்டூர் மணி, சேலம் மாவட்ட ஆவின் பால் கூட்டுறவு சங்க தலைவர் ஜெயராமன், மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.