• Fri. Apr 26th, 2024

இந்துக்கள் மீதான வன்முறை கலவரங்களை அரசு தடுத்து நிறுத்த கோரி ஆர்ப்பாட்டம்…

பங்களாதேஷில் இந்துக்களுக்கு எதிராக நடைபெற்றுவரும் வன்முறை கலவரங்களை தடுத்து நிறுத்தி இந்துக்களை காப்பாற்ற மத்திய அரசை வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இந்த மகா சபா சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பங்களாதேஷில் துர்கா பூஜை கொண்டாட்டங்களை தொடர்ந்து இந்துக்களுக்கு எதிராக நடைபெற்று வரும் வன்முறை கலவரங்களை தடுத்து நிறுத்த வேண்டும். 1947ஆம் ஆண்டு நம்முடைய நாடு சுதந்திரம் அடைந்தபோது பங்களாதேஷில் 35 விழுக்காடு இந்துக்கள் இருந்தனர். தற்போது அது 8.5 சதவீதமாக குறைந்துவிட்டது. அடுத்த 30 ஆண்டுகளில் பங்களாதேஷில் இந்துக்களை இருக்க மாட்டார்கள் என ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. 1971இல் பங்களாதேஷ் உருவாக்கியபோது சுமார் 30 லட்சம் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதில் பெருமளவில் பாதிக்கப்பட்டவர்கள் இந்துக்களே. இதனால் கிட்டத்தட்ட ஒரு கோடி இந்துக்கள் அகதிகளாக குடிபெயர்ந்தனர். அதன் பிறகு தொடர்ந்து இந்துக்கள் மீது வன்முறைகள் நடைபெற்று வருகின்றன.

தற்போது பங்களாதேசில் 22 மாவட்டங்களில் இந்துக்களுக்கு எதிரான வன்முறை பரவியுள்ளது. பல இடங்களில் சிலைகளை உடைத்து துர்கா பூஜை பந்தல்கள் சேதப்படுத்தி உள்ளனர். 150க்கும் மேற்பட்ட வீடுகள் உடைக்கப்பட்டு பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்ட உள்ளன. பல இந்துக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களுடைய உடமைகளும் சூறையாடப்பட்டுள்ளன. இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு துணைபோகும் பங்களாதேஷ் முஸ்லிம் அரசை கண்டித்தும் அங்குள்ள இந்துக்களின் உயிரையும், உடமைகளையும் பாதுகாக்க மத்தியில் ஆளும் மோடி அரசை கண்டித்தும் வன்முறைகளை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *