சென்னை மாநகராட்சி 187 வது வார்டில் புதியதாக கட்டப்பட்ட மாநகராட்சி கட்டிடத்தை இன்று துணை முதலமைச்சர் திறந்து வைத்தார்.

சென்னை பெருநகர சென்னை மாநகராட்சி உட்பட்ட 187 வது வார்டில் மடிப்பாக்கம் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று 187 வது வார்டில் மாமன்ற கட்டிடம் புதியதாக 98 லட்சத்தில் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்ட நிலையில், அந்த புதிய கட்டிடத்தை இன்று பயன்பாட்டிற்காக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், காணொளி காட்சி மூலமாக இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர் ஷெர்லி ஜெய், 187 வது வட்டச் செயலாளர் எம்.கே.ஜெய் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், மாநகராட்சி ஊழியர்கள், கட்சி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு இந்த புதிய கட்டிடத்தின் திறப்பு விழாவை கலந்து கொண்டு இந்த விழாவை சிறப்பித்தார்கள்.