கோவையில் பல் மருத்துவம் தொடர்பான டென்டல் பே மருத்துவமனை தனது புதுப்பிக்கப்பட்ட நவீன தொழில் வசதிகள் அடங்கிய புதிய கிளையை தடாகம் சாலையில் துவங்கியது..
பற்கள் தொடர்பான அனைத்து சிகிச்சைகளையும் அனுபவம் வாய்ந்த மருத்துவர்களை கொண்டு கடந்த பதிமூன்று ஆண்டுகளாக சாய்பாபாகாலனி பகுதியில் டென்டல் பே பல் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.இந்நிலையில் கோவை தடாகம் சாலையில் உள்ள வெங்கிட்டாபுரம் பகுதியில் நவீன தொழில் நுட்ப வசதகளுடன் கூடிய புதிய கிளையை டென்டல் பே துவங்கியது..இதற்கான துவக்க விழா மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர்கள் மருத்துவர் அம்பிகா தங்கபாண்டி,,மருத்துவர் மகேஷ் பெரியசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.இதில் சிறப்பு விருந்தினராக ராவ் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் ஆஷா ராவ் கலந்து கொண்டு புதிய கிளையை திறந்து வைத்தார்..இந்த புதிய மருத்துவமனையில், பல் வலி பிரச்னை, செயற்கை பல், பல் சீரமைப்பு, நிரந்தரமாக செயற்கை பல் கட்டுதல், கிளிப்’ பொருத்தி பற்களை சீரமைத்தல்,இம்ப்ளாண்ட் எனும் நவீன பல் சீரமைப்பு முறை போன்ற சிகிச்சைகள் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் வழங்கப்பட உள்ளதாக மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர்கள் தெரிவித்தனர்.