• Sun. Dec 21st, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மக்களை வதைக்கும் மோட்டார் வாகன சட்டத்தை திரும்பப் பெறக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்

Byகுமார்

Feb 22, 2024

மக்களை வதைக்கும் மோட்டார் வாகன சட்டத்தை திருப்பப் பெறக்கோரி உள்ளிட்ட 6அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் சோசியல் டெமாக்ரடிக் டிரேட் யூனியன் சார்பில் மத்திய அரசு மற்றும் பாஜக அரசை கண்டித்து
கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரையில் சோசியல்டெமாக்ரடிக் டிரேட் யூனியன் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் அருகே ஆட்டோ ஓட்டுனர் அதன் வடக்கு மாவட்ட தலைவர் நிஸார் தலைமையிலும், மாநில பொதுச்செயலாளர் N ரவூப் நிஸ்தார் சிறப்புரையாற்றினார். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மதுரை வடக்கு மாவட்ட தலைவர் மற்றும் தெற்கு மாவட்ட தலைவர் எஸ்டிபி கட்சி மற்றும் தொழிற்சங்கங்கள் மற்றும் பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
விவசாய விலைப்பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய் உரிமைக்காக போராடும் விவசாயிகள்.மீது நடத்தம் தாக்குதலை உடனே நிறுத்து. விவசாயிகளின் கடன்களையும் வழக்குகளையும் தள்ளுபடி செய், விவசாயிகளின் 6அம்ச கோரிக்கையை நிறைவேற்று வேலைவாய்ப்புகளை உருவாக்கும் பொதுத்துறை நிறுவனங்களை விற்காதே தொழிலாளர் விரோத தொகுப்பு சட்டங்களை திருப்பப் பெறு மக்களை வதைக்கும் மோட்டார் வாகன சட்டத்தை திரும்பப் பெறக்கோரி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் சோசியல் டெமாக்ரடிக் டிரேட் யூனியன் சார்பில் மத்திய அரசு மற்றும் பாஜக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.