தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கம் சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் நாகராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பணியாளர்கள் இன்று ஒரு நாள் விடுப்பு எடுத்து தமிழக அரசின் கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் கூறும்போது, நியாய விலை கடை பணியாளர்கள் அனைவருக்கும் மாதம் மாதம் முதல் தேதியில் ஊதியம் வழங்குவது உறுதி செய்ய வேண்டும் என்றும், நியாய விலைக்கடை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படவேண்டும், கொரோனா காலத்தில் பணிபுரிந்து உயிரிழந்த பணியாளர்களுக்கு இழப்பீடு தொகையாக 25 லட்சம் வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறும்போது, கூட்டுறவு துறையில் நியாய விலை கடையில் 3500 விற்பனையாளர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. அதனை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
அனைத்து நியாயவிலை கடைகளிலும் 4ஜி விற்பனை முனையம் வழங்கப்பட வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றி தரவேண்டும் என்று தெரிவித்தார்