• Sat. Dec 13th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

இந்தி திணிப்பைக் கண்டித்து திராவிடர் கழக மாணவர் அமைப்பின் சார்பாக ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் திராவிடர் கழகம் சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டம் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது.
பொதுவாகவே கிட்டத்தட்ட கடந்த ஒரு நூற்றாண்டு காலமாகவே இந்திக்கும் தமிழுக்குமான போராட்டம் என்பது தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.
மத்தியில் எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் ஏதாவது ஒருவகையில் தமிழ்மொழியை புறக்கணிப்பதோ அல்லது குறைத்து மதிப்பிடுதோ வாடிக்கையான ஒன்றுதான்.
அந்தவகையில் தற்போதைய பா.ஜ.க அரசும் தனது பங்கிற்கு இந்தியை கட்டாயமாக்குவதும் கூடவே இலவச இணைப்பாக சமஸ்கிருதத்தையும் முன்னிலைப்படுத்துவதுதான் தன்னுடைய தலையாய பணிபோல் ஏதாவது ஒருவகையில் இம்சித்துக்கொண்டே இருக்கிறது. கடந்த காலங்களில் நீதிக்கட்சி தொடங்கி தற்போதைய தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் வரை அனைவரும் ஒன்று சேர்ந்து வேண்டாம் இந்தி என்றாலும், விடமாட்டேன் போ என விரட்டி விரட்டி திணிக்கக் கூடிய நிலைதான் இன்றளவும் என்றால் அது மிகையாகாது. அந்தவகையில்தான் தற்போதைய நிலைக்கு எதிராக திராவிடர் கழக மாணவர் அமைப்பின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.