• Wed. Oct 15th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

சோழவந்தானில் போலியாக பதிவு செய்த பட்டாவை ரத்து செய்யக்கோரி பத்திரப்பதிவு அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

ByN.Ravi

Jun 19, 2024

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, முள்ளிப்பள்ளம் கிராமத்தில் 65 சென்ட் இடத்தை போலியாக வேறொருவர் பெயருக்கு பட்டா மாறுதல் செய்ததை ரத்து செய்து உரியவர் பெயருக்கு பட்டா வழங்க கோரி பத்திரப்பதிவு அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, முள்ளிப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேலி இவரது பெயரில் முள்ளிப்பள்ளம் கிராமத்தில் சுமார் 66 சென்டில் நிலம் முன்னோர்கள் சொத்து இருந்துள்ளது. இதை, அளப்பதற்காக முறையாக வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்திற்கு சென்று கடந்த மார்ச் மாதம் அளக்கச் சென்ற பொழுது அருகில் உள்ள நிலத்தில் கணக்கு பிள்ளையாக வேலை பார்க்கும் சீனிவாசன் என்பவர் முதலாளி பத்து நாள் கழித்து வருவார். அவர் வந்த பிறகு அளந்து கொடுக்கிறேன் என்று அளக்க வந்தவர்களை திருப்பி அனுப்பியுள்ளார்.
இதைத் தொடர்ந்து, தேர்தல் நடந்ததால் தேர்தல் முடிந்த பிறகு நிலத்தை அளப்பதற்கு ஏற்பாடு செய்த போது, அந்த 66 சென்ட் இடம் வேறொருவர பெயருக்கு மாறி இருந்தது கண்டு வேலியின் வாரிசுகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து, சோழவந்தான் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு வந்த அவர்கள் பதிவாளர் சுப்பையாவிடம் கேட்டபோது,அது வேறொருவர் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். வேலியின் வாரிசுகள் உயிரோடு இருக்கும்போது, அவருடைய அனுமதி இல்லாமல் எப்படி வேறொருவர் பெயருக்கு பட்டா மாறுதல் செய்தீர்கள் என்ற கேள்விக்கு உரிய பதில் தர மறுத்திருக்கிறார்.
மேலும் அவர்களிடம் பேசிய பதிவாளர் சுப்பையா, இதுகுறித்து மாவட்ட பதிவாளர் இடம் விண்ணப்பித்தால் அவர்கள் உரிய விசாரணை செய்து, போலியாக பெயர் மாற்றம் செய்திருந்தால் அதை உரியவர் பெயரில் மாற்றி தருவார்கள் என்று மழுப்பலான பதிலை சொல்லியதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து, வேலியின் மகள் வழி உறவினர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்த போது..,
நாங்கள் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள் வேலை நிமித்தமாக கடந்த 20 வருடங்களுக்கு முன்பு சென்னைக்கு குடிபெயர்ந்து விட்டோம். தற்போது, எங்களின்
பூர்வீக மான முள்ளிப் பள்ளம் கிராமத்திற்கு வந்து எனது பாட்டியின் பெயரில் உள்ள இடத்தை அளக்க முற்பட்டது போது, அதில் சுமார் 66 சென்ட் இடம் வேறொருவர் பெயருக்கு பட்டா மாறுதலாகி உள்ளது தெரிந்தது.
இது குறித்து சோழவந்தான் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு சென்று பதிவாளர் சுப்பையா விடம் கேட்டபோது, உரிய பதில் தர மறுக்கிறார். மேலும், மாவட்ட பதிவாளரை நேரில் சென்று சந்திக்குமாறு எங்களை வற்புறுத்துகிறார்.

மேலும் , கடந்த ஏப்ரல் மாதம் சென்னையில் உள்ள ஒரு வழக்கறிஞர் மூலம் 66 சென்ட் இடம் வேறொருவர் பெயருக்கு பட்டா மாறுதல் ஆகி உள்ளது வில்லங்க சான்று மூலம் தெரிய வந்துள்ளது. ஆகையால், எங்களது பாட்டி வேலி பெயரில் உள்ள 66 சென்ட் இடத்தை அவரது வாரிசுகளான எங்களது பெயருக்கு மாற்றி தர வேண்டும் போலியாக பட்டா மாற்றம் செய்த சப் ரிஜிஸ்டர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கேட்டுக் கொண்டுள்ளனர் .
இது குறித்து கடந்த வாரம் வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் இடத்தில் மனுவாக புகார் தெரிவித்துள்ளோம் .
வருகின்ற திங்கட்கிழமை மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் முகாமிலும், புகார் தெரிவிக்க இருக்கிறோம். முதல்வரின் தனி பிரிவிற்கும் புகார் தெரிவிக்க இருக்கிறோம் என்று கூறினார்கள்
இதுகுறித்து சோழவந்தான் சப்ரிஜிஸ்டர் சுப்பையாவிடம் கேட்டபோது, அந்த 66 சென்ட் இடமானது வாரிசுகளில் ஒருவர் மூலம் கடந்த 1964 ஆம் ஆண்டு வேறொருவர் பெயருக்கு விற்கப்பட்டுள்ளது.
அது தெரியாமல் இவர்கள் இப்போது வந்து குறை சொல்கிறார்கள். ஆகையால், மாவட்ட பதிவாளரிடம் முறையாக மனு கொடுத்து பட்டா போலியாக மாறி இருப்பது தெரிய வந்தால் உடனடியாக அதை கேன்சல் செய்து உரியவர் பெயருக்கு மீண்டும் பட்டா மாறுதல் செய்ய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.