• Wed. Jan 21st, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மூடி கிடக்கும் அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையை இயக்க, கரும்புகளுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

ByKalamegam Viswanathan

Jan 23, 2024

ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக மூடி கிடைக்கும் அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை தென் மாவட்ட கரும்பு விவசாயிகளின் வாழ்வாதாரத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த ஆலை கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக இயங்காமல் மூடி இருப்பதால் இங்குள்ள சர்க்கரை ஆலையின் தளவாட பொருட்கள் மின்சாதனங்கள் அனைத்தும் பழுதடைந்த நிலையில் உள்ளது. இதே நிலை நீடித்தால் சர்க்கரை ஆலையை விரைவில் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டு விடும். இதனால் கரும்பு விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் மற்றும் அதனை சார்ந்த விவசாய பெருமக்கள் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுவதாக கரும்பு விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதனால் மதுரை அலங்காநல்லூருக்கு வருகை தரும் தமிழக முதல்வர் அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும் இந்த கோரிக்கையை வலியுறுத்தும் விதமாக தமிழ்நாடு கரும்பு விவசாய சங்கம் சார்பில் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.