

கேப்டன் ஆணைக்கிணங்க மதுரை தேமுதிக ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பாக மாநில இளைஞரணி துணைச்செயலாளர் ராஜேந்திரன், உயர் மட்ட குழு உறுப்பினர் பாலன், மதுரை மாநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் பாலச்சந்திரன், மாநகர் தெற்கு மாவட்ட செயலாளர் முத்துப்பட்டி மணிகண்டன், புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் கணபதி, தலைமையில் தமிழக அரசை கண்டித்தும் திமுக தேர்தல் வாக்குறுதிப்படி அனைத்து பெண்களுக்கும் ஆயிரம் ருபாய் கட்டாயம் வழங்க வேண்டும் , விளை நிலங்களை அழித்து வரும் NLC நிர்வாகத்தை கண்டித்தும், தமிழகத்திற்கு கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிடவும், அனைத்து பொருட்களின் விலைவாசி உயர்வு , மின்சார கட்டண உயர்வு சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்தும் மற்றும் குண்டும் குழியுமா இருக்கும் சாலைகளை சீரமைக்க வலியுறுத்தியும் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் அண்ணாநகர் பகுதிகழக செயலாளர் முருகன், முனிச்சாலை பகுதி கழக செயலாளர் ராஜ்குமார் , மற்றும் மாவட்ட கழக அணி அமைப்பாளர்கள் மகளிர் அணியினர் பகுதி கழகம். ஒன்றியம், நகரம், வட்டம், ஊராட்சி, வார்டு கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
