சோழவந்தான் அருகே ரிசபம் கிராம பகுதியில் சுமார் ஆயிரம் ஏக்கரில் நிலத்தில் விவசாயம் செய்து வருகின்றனர். இவர்களுக்கு ரோடு வசதி இல்லாததால் பல இன்னலுக்கு ஆளாக்கப்பட்டு சிரமப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து விவசாயிகள் மற்றும் கிராம பொதுமக்கள் சார்பாக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பழனியப்பன் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை மனு கொடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறும் பொழுது ரிஷபம் கிராமப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பெரும்பாலும் விவசாயம் செய்தும்,விவசாய கூலி வேலை செய்தும் உழைத்து வருகின்றனர். எங்கள் பகுதியில் சுமார் ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இங்கே விவசாயம் செய்யவும், விவசாயக் கூலி வேலைகளுக்கு வயலுக்கு செல்வதற்கு சுமார் 4 கிலோ மீட்டர் செல்ல வேண்டிய நிலை உள்ளது.இதனால் விவசாயிகள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர். அறுவடை காலங்களில் அறுவடை செய்யும் நெல்லை களத்திற்கு கொண்டு செல்ல ரோடு வசதி இல்லாததால், சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரம் டிராக்டரில் கொண்டு செல்ல அதிகப்படியான.பணம் விவசாயிகளுக்கு செலவாகிறது. இது போக விவசாயம் செய்வதற்கு உரமூடை கொண்டு செல்ல ஒரு மூட்டைக்கு 200 ரூபாய் கூலி கேட்டு வருகின்றனர்.இதனால் விவசாயத்தில் வரக்கூடிய வருமானம் பெரும்பாலும் இதற்கே விரையமாக செலவாகிறது.மேலும் விவசாய மகசூல் ஆன தேங்காய், வாழைக்காய், வாழை இலைகட்டு ஆகியவற்றை ரோடு வசதி இல்லாததால் சுமார் 4 கிலோ மீட்டர் வரை தலைசுமையாக சிரமத்துடன் ஊருக்குள் கொண்டு வர வேண்டிய அவல நிலை உள்ளது. விவசாயிகளின் சிரமத்தைப் போக்க ரிஷபம் சடையாண்டி கோவில் முதல் சின்ன கண்மாய் வரையில் செம்மண் ரோடு அமைத்து கொடுக்க வேண்டும். இதனால் விவசாயிகள் மிகவும் பயனடைவார்கள். ஏற்கனவே இந்த ரோடு அமைக்க வேலை நடைபெற்று நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதே போல் சோழவந்தான் நகரி சாலையில் கல்வி பள்ளியிலிருந்து பள்ளமடை வரை செம்மண் சாலை அமைத்துக் கொடுக்க இப்பகுதி விவசாயிகள் மற்றும் கிராம பொதுமக்கள் சார்பாக மாவட்ட கலெக்டரை கேட்டுக் கொண்டு கோரிக்கை மனு கொடுத்துள்ளதாக தெரிவித்தார்.