• Wed. Sep 2nd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்…

BySeenu

Jan 7, 2025

தமிழக ஆளுநரை கண்டித்து கோவையில் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

நேற்றைய தினம் தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நடந்து கொண்ட விதத்தை கண்டித்து, இன்று தமிழகம் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக கழகம் சார்பில் டாடாபாத் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக், திமுக சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் பொங்கலூர் பழனிச்சாமி உட்பட திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் என சுமார் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்தும் பாஜக, மற்றும் அதிமுகவை கண்டித்தும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது. இதில் கலந்துகொண்ட திமுகவினர் ஆளுநரை கண்டித்து கண்டன பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர்.

இந்நிகழ்வில் கண்டன உரை ஆற்றிய நா.கார்த்திக் ஆளுநர் மீண்டும் ஒருமுறை தமிழக சட்டப்பேரவை மரபை மீறி உள்ளதாக கூறினார். அதுமட்டுமின்றி தமிழ் தாய் வாழ்த்திற்கு அவமரியாதையை ஏற்படுத்தி உள்ளதாக கூறிய அவர் தமிழக அரசு கொண்டுவரும் பல்வேறு தீர்மானங்களை கிடப்பில் போட்டு விடுவதாகவும் குற்றம் சாட்டினார். எனவே ஆளுநரே திரும்பி போ என்ற முழக்கம் இன்று தமிழகம் முழுவதும் ஒலிக்கப்படுவதாக தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய பொங்கலூர் பழனிச்சாமி, ஆளுநர் தமிழக மக்களின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் அவர் செயல்பட்டை செய்து கொண்டிருப்பதாக தெரிவித்தார். யாரேனும் குற்றம் செய்தால் அவர்களது முதலாளியை தான் குற்றம் சொல்ல வேண்டும் என குறிப்பிட்ட அவர் கவர்னரை நியமித்துள்ள மோடியை தான் குற்றம் சொல்ல வேண்டும் என சாடினார். மோடி தமிழ்நாட்டிற்கு செய்யாத கெடுதல்களே கிடையாது எனவும் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய பல்வேறு நிதிகளை வழங்காமல் மோடி மௌன சாமியாராக இருப்பதாக விமர்சித்தார்.