• Tue. Oct 14th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

ஜனநாயக ஆட்சியா? காட்டுமிராண்டி ஆட்சியா?

ByKalamegam Viswanathan

Jun 30, 2025

அம்மாவின் படத்தை குப்பையில் போட்ட கயவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லை என்றால் எடப்பாடியார் ஆணைபபெற்று சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்துவோம்.

கழக அம்மா பேரவை செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் கடும் எச்சரிக்கை,

மதுரை

தமிழகத்தில் நடப்பது ஜனநாயக ஆட்சியா? இல்லை காட்டுமிராண்டி ஆட்சியா? என்று கேள்வி எழுந்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் விசாரணை அழைத்துச் செல்லப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தமிழகம் மட்டுமல்ல, தேசிய அளவில் நீதி கேட்டு ட்ரெண்டிக்காக உருவாகி உள்ளது இன்றைக்கு ஸ்டாலின் திமுக ஆட்சியில் இருப்பது காவல் நிலையமா ?கொலை நிலையமா? என்று கேள்வி எழுந்துள்ளது.

அரசு இதுகுறித்து கவலைப்பட்டதாக தெரியவில்லை இதுகுறித்து ஸ்டாலின் பதில் சொல்ல முன்வரவில்லை என்ற கேள்வி எழுந்து வருகிறது? இன்றைக்கு ஸ்டாலின் ஆட்சியில் வரி உயர்வு போல லாக்கப் மரணங்களும் உயர்ந்து வருகிறது.

தேசிய மனித உரிமை ஆணையம் ஒரு தகவல் வெளியிட்டது அதில் லாக் அப் மரணத்தில் தென் மாநிலங்களில் தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது என்று கூறியுள்ளது

2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தஞ்சை மேற்கு காவல் நிலையத்தில் சத்தியவான் என்பவரை அழைத்து செல்லப்பட்டு அவர் உயிர்த்தார்.

2021 செப்டம்பர் மாதம் பராமத்தி வேலூர் காவல் நிலையத்தில் மணிகண்டன் அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார் .

2021 டிசம்பர் மாதம் ராமநாதபுரம் காவல் நிலையத்தில் மணிகண்டன் என்ற கல்லூரி மாணவர் அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார். 2022 பிப்ரவரி மாதம் நெல்லை காவல் நிலையத்தில் சுலைமான் என்பவர் அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார்.

2022 ஏப்ரல் சென்னை தலைமைச் செயலாளர் காலனி காவல் நிலையத்தில் விக்னேஷ் என்பவர் அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார். 2022 ஏப்ரல் திருவண்ணாமலைய
காவல் நிலையத்தில் தங்கமணி என்பவர் அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார்.

2022 ஜூன் பழைய கொடுங்கையூர் காவல் நிலையத்தில் அப்பு என்பர் அழைத்துச் செல்லப்பட்டு உயிர் இழந்தார் .

ஏற்கனவே 2022 ஆண்டு நடைபெற்ற சட்டசபை மானிய கோரிக்கையில் லாக்கப் மரணம் குறித்து எடப்பாடியார் பல்வேறு கேள்வி எழுப்பினர் ஆனால் உரிய பதிலை ஸ்டாலின் கூறவில்லை .எடப்பாடியார் கேட்ட கேள்விகளை கூட நேரடியாக ஒளிபரப்பு செய்யவில்லை.

திமுக ஆட்சியில் லாக்கப் மரணம் எடுத்துக் கொண்டால் 2021 ஆண்டில் 2 மரணம், 2022 ஆண்டில் 4 மரணம், 2023 ஆண்டில் 7 மரணங்கள் ஏற்பட்டுள்ளது ஆக மொத்தம் இதுவரை 25 லாககப் மரணங்கள் நடைபெற்றதாக செய்திகள் வெளி வருகிறது.

அதேபோல கடந்த 2025 மார்ச் மாதம் முத்துக்குமார் என்ற காவலர் படுகொலை செய்யப்பட்டதற்கு எடப்பாடியார் கேள்வி எழுப்பும் போது உரிய பதில் இல்லை.

இன்றைக்கு அரசு வேடிக்கை பார்க்கிறதா? ஸ்டாலினுக்கு நிர்வாகம் தெரியவில்லையா அல்லது தெரிந்தும் கையாள தெரியவில்லையா? இல்லை சாகட்டும் என்று சாக்கு போக்கு சொல்லி இருந்து விடுகிறாரா? ஸ்டாலினுக்கு காவல் துறையை வழிநடத்த தெரியவில்லையா? இதே அம்மாவின் ஆட்சியில் இங்கிலாந்து ஸ்காட்லாந்து நிகராக தமிழக காவல்துறை இருந்தது

வேடசந்தூரில் அரசு விழாவில் அம்மாவின் படத்தை குப்பை தொட்டியில் போடப்பட்டுள்ளது இது மிகவும் வேதனை அளிக்கிறது இந்த ஆட்சியை குப்பை தொட்டியில் தூக்கி வெகு தொலைவில் இல்லை

அம்மாவின் படத்தை பூஜை அறையில் வைக்க வேண்டியதை குப்பைத்தொட்டியில் போட்டதை கண்டு 8 கோடிமக்களும் வேதனை அடைந்துள்ளனர்.இதற்கு கழக அம்மா பேரவை கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.

அம்மாவின் திட்டங்களை சாக்கு போக்கு சொல்லி நிறுத்திவிட்டது மட்டுமல்ல, இப்போது அம்மாவின் படத்தை குப்பைத்தொட்டியில் வீசியது எங்களுக்கு ரத்தம் வருகிறது.

இதுகுறித்து கழக பொதுச் செயளாலர் எடப்பாடியார் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார் அதேபோல கழகப் பொருளாளரும் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார் .இதன் மூலம் தொண்டர்கள் மனக்குமுறல் ஏற்பட்டுள்ளனர் ஆனால் அரசு இதைக் கண்டும் காணாமல் இருப்பது வேதனையின் உச்சமாக இருக்கிறது .இதற்கு தெய்வம் நிச்சயம் உங்களை தண்டிக்கும்.

மக்கள் தொண்டே, மகேசன் தொண்டு என்று மக்களுக்காக தொண்டு செய்த அம்மாவின் படத்தை குப்பைத்தொட்டில் போட்ட கயவர்களை தண்டித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் இந்த சம்பவத்திற்கு கழக அம்மா பேரவை கண்டனத்தை தெரிவித்து மட்டுமல்லாது இந்த செயலில் ஈடுபட்ட கயவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க விட்டால் கழக அம்மா பேரவையின் சார்பில், கழக பொதுச்செயளாலர் எடப்பாடியாரின் ஆணையை பெற்று மாநிலம் முழுவதும் சிறை நிரப்பு போராட்டம் நடத்த நாங்கள் அஞ்ச மாட்டோம்.

மதுரை மாநகராட்சியில் ஊழல் தலை விரித்து ஆடுகிறது இது வேதனை உச்சமாக உள்ளது

இன்றைக்கு இந்த ஆட்சியை மக்கள் தூக்கி எரியும் காலம் வெகுதொலைவில் இல்லை, இன்றைக்கு தமிழகத்தில் ஆட்சிமாற்றம் ஏற்பட எடப்பாடியார் வெற்றி பயணத்தை துவக்கி விட்டார்.

அம்மா ஆட்சி நிச்சயம் மலரும் சென்னை ஜார்ச் கோட்டையில் மட்டுமல்லாது அனைத்து இடங்களிலும் அம்மாவின் நிச்சயம் வைப்போம்.

அம்மாவை படத்தை குப்பையில் போட்ட உங்களுக்கு மக்கள் சவுக்கடி கொடுக்க தயாராக விட்டார்கள். ஏனென்றால் மடிக்கணித்திட்டம், கறவை மாடு ஆடுகள் திட்டம், பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் ,பெண் கமோண்டோ படை திட்டம், தாலிக்கு தங்கம் திட்டம் கொடுத்த அம்மாவின் புகழ் பஞ்ச பூதங்கள் இந்த உலகில் இருக்கும் வரை நிச்சயம் இருக்கும் எனக் கூறினார்.