• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

உசிலம்பட்டி 58 கால்வாயில் தண்ணீர் திறக்கக் கோரி..,ரயில் மறியலில் ஈடுபட முயன்றவர்கள் கைது..!

ByP.Thangapandi

Nov 24, 2023

வைகை அணையிலிருந்து உசிலம்பட்டி 58 கால்வாயில் தண்ணீர் திறக்க கோரி ரயில் மறியலில் ஈடுபட முயன்றவர்களை காவல் துறையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியின் கனவு திட்டமாகவும், உசிலம்பட்டி மக்களின் குடிநீர் ஆதராமாகவும் விளங்கும் 58 கிராம கால்வாய் திட்டத்தில் தண்ணீர் திறக்க கோரி விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நலையில் 58 கால்வாயில் தண்ணீர் திறக்க கோரி அனைத்து கள்ளர் கூட்டமைப்பு சார்பாக ரயில் மறியல் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த சூழலில், இன்று வைகை அணையிலிருந்து 58 கால்வாயில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என கோஷங்கள் எழுப்பி ரயில் மறியலில் ஈடுபட முயன்ற அனைத்து கள்ளர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன் மற்றும் அவருடன் நான்கு நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர்.
மேலும் மதுரையில் இருந்து தேனி நோக்கி சென்ற மதுரை போடி ரயில் பாதுகாப்பாக சென்ற நிலையில் ரயில் மறியல் சம்பவத்திற்காக ரயில்வே பாதுகாப்பு போலீஸார் மற்றும் உசிலம்பட்டி காவல்துறையினர் சுமார் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.