• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ஆபாச படத்தலைப்புக்கு எதிர்ப்பு படத்தை தடை செய்ய அரசுக்கு கோரிக்கை?

மலையாளத்தில் 1980களில் செக்ஸ் திரைக்கதையில் தயாரான திரைப்படங்களை தமிழில் டப்பிங் செய்து வெளியிடுவார்கள் அதற்கு வைக்கப்படும் தலைப்புகள் அறுவெறுப்புடன் கூடியதாக இருக்கும் மாமனாரின் இன்பவெறி என்றெல்லாம் தலைப்பு வைத்து தலைப்புக்கு கீழே சிறிதாக மருத்துவ கல்வி படம் என அச்சிட்டு தணிக்கை சான்றிதழ் வாங்கிவிடுவார்கள் இதுபோன்ற திரைப்படங்களை திரையிடுவதற்கு என்று தமிழகத்தில் குறிப்பிட்ட திரையரங்குகள் உண்டு அதேபோன்ற கலாச்சாரம் தமிழ் சினிமாவில் தலைதூக்குகிறதா என்கிற அச்சம் எழுந்திருக்கிறது

வரதராஜ் என்பவர் எழுதி, இயக்கி தயாரித்துள்ள படத்திற்கு, ‛பெண் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே சரக்கு மற்றும் சேவை வரி உள்பட’ என தலைப்பு வைத்துள்ளனர்.

இப்படி ஒரு தலைப்பை ஒரு வருடத்திற்கு முன்பு அறிவிக்கப்பட்டபோது கடுமையான எதிர்ப்பு சினிமா வட்டாரத்திலேயே கிளம்பியது இருந்தபோதிலும் படப்பிடிப்பை முடித்து விளம்பரம் செய்யும் வேலையை படக்குழு தொடங்கியுள்ளது இந்தப் படத்தில் சின்னத்திரை நடிகர் ராஜ்கமல் நாயகனாக நடிக்க ஸ்வேதா பண்டிட் நாயகியாக அறிமுகமாகிறார். பெண்களுக்கு எதிராக வருகிறோம் எனக்கூறி கொண்டு அதன் மூலம் காசு பார்க்கும் கூட்டத்தில் இப்படமும் ஒன்று என இப்போதும்எதிர்ப்பு எழுந்துள்ளது. ஆனால், படக்குழு இதை மறுத்துள்ளது.


அவர்கள் கூறுகையில், ‛ஆபாசமின்றி படத்தை எடுத்துள்ளோம். இப்படத்தை பார்க்கும் போது, இது பெண்களுக்கு ஆதரவான, எச்சரிக்கை தரும் படம் என புரியும். இன்று பெண்களுக்கு எதிரான ஒரு கும்பல் உலாவுகிறது அதை இப்படம் தோலுரிக்கும்’ என்றனர். இருந்தபோதிலும் இது போன்ற தலைப்புகள் பெண்களை இழிவுபடுத்துவதாக இருக்கிறது அதனால் படத்தையே தடைசெய்ய வேண்டும் என கோரிக்கை மனு அனுப்ப நல்ல சினிமாவை விரும்பும் உதவி இயக்குனர்கள் முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.