• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மக்களவையில் நிறைவேறிய டெல்லி நிர்வாக திருத்த மசோதா..!

Byவிஷா

Aug 4, 2023

டெல்லியில் அதிகாரிகளை நியமிக்க ஆளுநருக்கு அதிகாரம் அளிக்கும் வகையிலான டெல்லி தேசிய தலைநகரப் பகுதி சட்டத் திருத்த மசோதா, மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
மக்களவையில் டெல்லி சட்டத் திருத்த மசோதாவை உள்துறை இணையமைச்சர் நிதியானந்த் ராய் புதன் கிழமை தாக்கல் செய்தார். சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து, குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது.
மேலும், ஆம் ஆத்மி எம்பி சுசில் குமார் ரிக்குவை மழைக்கால கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டார். அவையில், விதிமுறைகளை மீறி செயல்பட்ட குற்றஞ்சாட்டின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மாநிலங்களவையில் ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.