இண்டிகோ விமான சேவை நாடு முழுவதும் கடந்த ஒரு வார காலமாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இது குறித்து மதுரை விமான நிலையத்தில் இண்டிகோ விமான நிறுவனத்தின் சேவை குறித்து மதுரை விமான நிலைய இயக்குனர் முத்துக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.

இன்று நான் பத்திரிகையாளர்களுக்கு சுருக்கமாகச் சொல்ல வேண்டியது என்னவென்றால் கடந்த சில நாட்களாக இண்டிகோ விமானம் செயல்பாடு பொதுமக்களின் பயணத்தை தாமதப்படுத்துதியது.

இந்த மாதம் மூன்றாம் தேதி முதல் பத்தாம் தேதி வரை நாங்கள் கண்காணித்துள்ளோம். குறிப்பாக எங்களிடம் ஒரு விளக்கம் உள்ளது பல்வேறு காரணங்களால் இண்டிகோ விமானங்கள் செயல்பாட்டு காரணம் இதைப் பற்றி ஒரு சுருக்கமான சுருக்கத்தை நான் கொடுக்க விரும்புகிறேன்.
மூன்றாம் தேதி எங்களிடம் 30 விமான சேவை செயல்பாட்டுக்கு தயாராக இருந்தது செயல்பாட்டு அட்டவணை படி ஆனால் இரண்டு விமானம் ரத்து செய்யப்பட்டது. பின்னர் வெள்ளிக்கிழமை அதிகபட்சமாக 32 அட்டவணை இருந்தது ஆனால் 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. இதனால் சுமார் 21 விமானங்கள் தாமதமானது.
பின்னர் சனிக்கிழமை விமானங்கள் எதுவும் ரத்து செய்யப்படவில்லை ஆனால் எட்டு விமானங்கள் தாமதமானது. இந்த தாமத நிலைமை தற்போது மேம்பட்டு உள்ளது திங்கட்கிழமை ஒரு ரத்து கூட இல்லை தாமதமும் இல்லை. 9 ஆம் தேதி இரண்டு விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும் எந்த விமான சேவையும் தாமதமும் ஏற்படவில்லை.
புதன்கிழமை இதுவரை ரத்து செய்யவும் இல்லை, எந்த தாமதமும் இல்லை.
அதுதான் பல்வேறு தருணங்களின் நிலை இது தொடர்பாக விமான நிறுவனங்கள் எங்களுடன் விவரங்களைப் பகிர்ந்து கொண்டன.
அவர்களுக்கு அதற்கேற்ற கொள்கை உள்ளது. இரண்டு மணி நேரம் தாமதத்திற்கு பயணிகளின் புத்துணர்ச்சிக்கு தேவையான டீ ஸ்நாக்ஸ் உள்ளிட்ட வகைகள் வழங்கப்பட்டது.
மேலும் 6 மணி நேரத்திற்கு மேல் தாமதத்திற்கு பயணிகளுக்கு விமான டிக்கெட் பணத்தை முழுமையாக திருப்பிக் கொடுத்துள்ளது ஒரு சில பயணிகளுக்கு மாற்று விமானத்தில் கூடுதல் கட்டணம் இன்றி பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் காத்திருப்பு நேரத்தில் பயணிகளுக்கு கூடுதலாக உணவுகளும் வழங்கப்பட்டது.
மதுரையில் 24 மணி நேரத்திற்கு மேல் தாமதம் ஏற்படும் சூழ்நிலை எங்களுக்கு இல்லை. கடந்த மூன்றாம் தேதி முதல் 10ஆம் தேதி வரை மதுரை விமான நிலையத்தில் உள்ள பயணிகளுக்கு எந்தவித வகையிலும் அசெளகர்யம் ஏற்படாமல் இருப்பதற்கு விமான நிலைய நிர்வாகம் சார்பாக பயணிகள் அமர்வதற்கு அனைத்து இடங்களிலும் இருக்கைகள், தேவையான உணவு மற்றும் புத்துணர்ச்சி பானங்கள் வழங்கினாலும் அவற்றின் இருப்புகளை நாங்கள் உறுதி செய்து கொண்டோம்.
மேலும் உணவகங்கள் மற்றும் சிற்றுண்டி உள்ளிட்ட அவைகள் திறந்து வைக்கப்பட்டிருந்தன. மேலும் பயணத்தில் இருக்கக்கூடிய குழந்தைகளுக்கு பால் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் கிடைப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
பயணிகளின் தேவைகளுக்கு வாடகை கார்கள் போதிய அளவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மதுரையில் உள்ள மருத்துவமனையின் மூலம் தற்காலிகமாக மருத்துவ அறையும் தயார் நிலையில் இருந்தது.

ஆனால் இந்த பிரச்சனையின் போது யாருக்கும் எந்தவித உடல் நலக் குறைவுகளும் அசௌகரியம் ஏற்படவில்லை. சுகாதாரத்தை உறுதி செய்வதில் வழக்கம்போல் கழிவறைகளை சுத்தம் செய்வதை விட கூடுதலாக கவனமுடன் சுத்தம் செய்து பராமரிக்கப்பட்டது.
மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான வசதிகள் மற்றும் அவர்களின் கழிப்பறைகளும் சுத்தமான முறையில் பராமரிக்கப்பட்டது.
அவசர உதவி எண்கள் விமான நிலையம் முனைய மேலாளர் எண்கள் தயார் நிலையில் இருந்தது.
இண்டிகோ விமானபயணம் குறித்து வந்த அனைத்து ஃபோன்களுக்கும் முறையான வழிகாட்டுதல் அளிக்கப்பட்டது. முடிந்தவரை பயணிகளுக்கு முன் கூட்டிய தகவல் தெரிவிக்கப்பட்டது அப்படி இல்லாத பட்சத்திலும் இங்கு வருபவர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டிருந்தது. பயணிகளிடம் நாங்களே நேரடியாக சென்று அவர்களிடம் உள்ள நிறைகுறைகள் குறித்து கேட்டு அறிந்தோம். அவர்களை நாங்கள் சிறந்த முறையில் பார்த்துக் கொண்டதற்கு பயணி பயணிகள் எங்களுக்கும் நன்றி தெரிவித்தார்கள்.
மதுரை விமான நிலைய ஒரு நிர்வாகம் பயணிகளுக்கு எப்பொழுதும் சேவைக்கு உறுதுணையாக இருந்துள்ளது. இண்டிகோ நிறுவனமும் சேவைக்கு உறுதுணையாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். எனவே அனைவரும் நிச்சயமாக மதுரை விமான நிலையத்தில் பயணியுங்கள் என விமான நிலைய இயக்குனர் முத்துக்குமார் கூறினார்




