• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

தெய்வமச்சான் – விமர்சனம்

Byதன பாலன்

Apr 23, 2023

தங்கைக்குத் திருமணம் செய்ய முயலும் விமலுக்கு உள்ளும் புறமும் தடைகள். அவற்றை எப்படி எதிர்கொள்கிறார்? கடைசியில் என்னவாகிறது? என்பதுதான் தெய்வமச்சான் படத்தின் கதை. தங்கைக்குத் திருமணம் என்றால் வரப்போகிறவர் மச்சான் தானே. அதுதான் தெய்வமச்சான் பெயருக்குக் காரணம்.

களவாணி, கலகலப்பு போன்று ஏற்கெனவே பல நகைச்சுவைப் படங்களில் நடித்திருக்கும் விமல், இந்தப்படத்தில் மிக எளிதாக நடித்திருக்கிறார். கனவில் வரும் வேல இராமமூர்த்தி சொல்லும் விசயங்களுக்காகப் பயப்படுவது, நனவில் நடக்கும் தடைகளை எதிர்கொள்வது உள்ளிட்ட காட்சிகளில் தன் தனித்துவத்தைக் காட்டியிருக்கிறார் விமல்.
அவருக்கு ஜோடியாக நடித்திருக்கும் நேகா ஜா நன்றாக இருக்கிறார். படத்தில் அவருக்கு அதிகம் வேலையில்லை.
விமலின் தங்கையாக நடித்திருக்கும் அனிதா சம்பத்துக்கு முக்கிய வேடம். அதை உணர்ந்து பொறுப்பாக நடித்திருக்கிறார்.பெரும்பாலான காட்சிகளில் சோகமாகவே நடிக்க வேண்டிய தேவை. அதற்கேற்ப நடித்திருக்கிறார்.
மச்சானாக நடித்திருக்கும் வத்சன் வீரமணிக்கு முக்கியத்துவம் அதிகம். அவரே திரைக்கதை எழுத்தாளர் என்பதால் காட்சிகளின் தன்மைகளை உணர்ந்து நடித்து சிரிக்க வைக்கிறார்.
பால சரவணன், பாண்டியராஜன், தீபா சங்கர், ஆடுகளம் நரேன், கிச்சா ரவி உட்பட பலர் இருக்கிறார்கள். சிலர் சிரிக்க வைக்கிறார்கள் சிலர் சிரிப்பு என்கிற பெயரில் சோதித்திருக்கிறார்கள்.ஒளிப்பதிவாளர் கேமில் ஜே.அலெக்ஸ், நகைச்சுவைப் படம்தானே நமக்கு அதிகம் வேலையில்லை என்கிற எண்ணத்துடன் இயங்கியிருப்பது போல் தெரிகிறது
இசையமைத்திருக்கும் அஜீஸ், பின்னணி இசைமூலமும் சிரிக்க வைக்கலாம் என்பதைப் புரிந்து வேலை செய்திருக்கிறார்.
திரைக்கலை மூலம் மக்களைச் சிரிக்க வைக்க வேண்டும் என்று சிந்தித்த இயக்குநர் மார்டின் நிர்மல் குமார் அதைச் செயல்படுத்தியும் இருக்கிறார்.