• Wed. Sep 2nd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

விரைவில் மகளிர் சுய உதவி குழக்களின் கடன் தள்ளுபடி..!

Byகாயத்ரி

Mar 31, 2022

கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி, “விரைவில் மகளிர் சுய உதவி குழுக்களின் கடன் தள்ளுபடியான ரசீதுகள் வழங்கப்படும்” என்று கூறியுள்ளார். சென்னை, பிராட்வே மத்தியக் கூட்டுறவு வங்கியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி ஆகியோர் நகைக்கடன் தள்ளுப்படிக்கான சான்றிதழ்களை வழங்கினர்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியசாமி, ”மகளிர் சுய உதவிக் குழு கடன் தள்ளுபடி வழங்குவதற்காக தற்போது கணக்கெடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் கடன் தள்ளுபடிக்கான ரசீதுகள் வழங்கப்படும்” என்று அவர் கூறியுள்ளார்.