• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

ஸ்ரீமதி மரணம் … அண்ணாமலை இதுவரை கருத்து தெரிவிக்காதது ஏன்? கே.எஸ்.அழகிரி

ByA.Tamilselvan

Aug 31, 2022

கள்ளிக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இதுவரை கருத்து தெரிவிக்காதது ஏன்?என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.
. “கனியாமூர் பள்ளி மாணவி மரணத்திற்கு மட்டும் ஏன் அவர்கள் கருத்து சொல்லவில்லை? அல்லது ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை? முறையான நீதி விசாரணை வேண்டும் என ஏன் கேட்கவில்லை. எதற்காக அவர்கள் நீதிமன்றம் செல்லவில்லை? ஒரு கிறிஸ்தவ பள்ளியில் படித்த ஒரு குழந்தை மரணம் எய்தியதற்காக உச்ச நீதிமன்றம் வரை சென்றார்கள். அந்த குழந்தை விஷயத்தில் அவ்வளவு ஆர்வம் காட்டியவர்கள், கள்ளக்குறிச்சி மாணவி விஷயத்தில் ஆர்வம் காட்டாததன் மர்மம் என்ன? எதற்காக பாஜகவினர் இவ்வாறு நடந்துகொள்கிறார்கள்? எதற்காக ஆர்எஸ்எஸ் மவுனமாக இருக்கிறது? என்பதை அறிய தமிழ்நாடு காங்கிரஸ் விரும்புகிறது’ என்றும் கே.எஸ்.அழகிரி கூறினார்.