• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

கேப்டன் விஜயக்காந்த் மறைவு – உசிலம்பட்டியில் தேமுதிக நிர்வாகிகள் அஞ்சலி – கதறி அழுத துணை நடிகை

ByP.Thangapandi

Dec 28, 2023

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி முருகன் கோவில் முன்பு தேமுதிக நிறுவனரும், நடிகருமான கேப்டன் விஜயக்காந்த் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்ததை அடுத்து தேமுதிக உசிலம்பட்டி தொகுதி பொறுப்பாளர் ரவிச்சந்திரன் தலைமையிலான தேமுதிக நிர்வாகிகள் கேப்டன் விஜயக்காந்த் திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து அஞ்சலி செலுத்தும் இடத்திற்கு வந்த உசிலம்பட்டி தேமுதிக மகளீரணி நிர்வாகியும், கிடா திரைப்படத்தில் பூ ராமுவிற்கு துணைவியாக நடித்த நடிகை பாண்டியம்மாள் விஜயக்காந்த் திரு உருவ படத்தை பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுத சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.