• Sun. May 5th, 2024

பெருங்குடி ஊராட்சியில் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம்..!

ByKalamegam Viswanathan

Dec 27, 2023

திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் பெருங்குடி ஊராட்சியில் மக்களின் முதல்வர் திட்டத்தின் கீழ் பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் 600-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மனுக்களை அளித்தனர்
திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம், பெருங்குடி ஊராட்சியில் மக்களின் முதல்வர் திட்டத்தின் கீழ் பொதுமக்களின் குறைதீர்ப்பு சிறப்பு முகாம் நடைபெற்றது. பெருங்குடி அமுதம் பள்ளியில் நடைபெற்ற சிறப்பு குறை தீர்ப்பு முகாமில் துணை ஆட்சியர், நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் முருகேசன்,கள்ளிக்குடி வட்டாட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) நீலாதேவி, திருப்பரங்குன்றம் வட்டாட்சிய வட்டார வளர்ச்சி அலுவலர் கீதா, பெருங்குடி ஊராட்சி மன்ற தலைவர் பத்ம முருகேசன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் விஜயலட்சுமி ராஜேந்திரன், ஊராட்சி அலுவலர் செந்தில் வேல் முருகன் ஆகியோர் மக்களின் முதல்வர் குறை தீர்ப்பு முகாமில் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டனர்.
இந்த ஆய்வில் மதிபீட்டு குழுவில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர், அரசு மருத்துவமனை முதல்வர், மருத்துவர்கள் மற்றும் அத்துறை சார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *