தென்காசி அருள்மிகு காசி விஸ்வநாதர் ஆலயம் கும்பாபிஷேகம் நடந்து மூன்று மாதம் கடந்த பின்பும் கும்பாபிஷேகத்திற்காக ராஜகோபுர கலசத்தின் மேல் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பலகையிலான மேடையானது இன்று வரை அகற்றப்படவில்லை.

இன்று கோபுரத்தில் இருந்து சிமெண்ட் கலசம் கீழே விழுந்துள்ளது இந்த கலசமானது பக்தர்களின் தலையில் விழுந்திருந்தால் உயிர் சேதம்ஏற்பட்டிருக்கும். எனவே கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஹெல்மெட் அணிந்து வரும்படி கேட்டுக்கொள்கிறோம் என்று சிவனடியர்கள் வேதனையுடன் தெரிவித்தனர். பக்தர்களின் நலனில் அக்கறை இல்லாத அறநிலைதுறை நிர்வாகம்.