• Sat. Sep 30th, 2023

தண்டட்டி திரை விமர்சனம்

Byஜெ.துரை

Jun 21, 2023

பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் பசுபதி, ரோகினி, அம்மு அபிராமி, தீபா சங்கர், செம்மலர் அன்னம், விவேக் பிரசன்னா நடிப்பில் ராம் சங்கையா என்ற அறிமுக இயக்குனர் எழுதி இயக்கி உள்ள திரைப்படம் தண்டட்டி

சில நாட்களில் ஒய்வு பெற வேண்டிய வயதில் ஒரு குற்றவாளியைக் கடுமையாகத் தண்டித்த காரணத்தால் மனித உரிமை அமைப்பின் விசாரணைக்கு ஆளாகி மாற்றப்பட்டு புதிய காவல் நிலையத்திற்கு வந்திருக்கும் காவலர் (பசுபதி) அந்தப் பகுதியில் ஒரு குறிப்பிட்ட ஊரில் எந்த பிரச்சனை என்றாலும் போலீஸ் போகாது

காரணம் அவர்களை எல்லாம் போலீசால் சமாளிக்க முடியாது. அந்த ஊரில் இருந்து ஒரு சிறுவன் தன் அப்பத்தாவைக் காணவில்லை என்று புகார் தர வருகிறான் மேலும் சில பெண்களும் தங்கள் அம்மாவைக் காணவில்லை என்று வருகிறார்கள் காணமல் போனது ஒரே பெண்தான்

சக காவலர்களின் எச்சரிக்கையையும் மீறி விசாரணையில் இறங்கும் அந்த சீனியர் காவலர் அந்தப் பெண்மணியை (ரோகினி ) கண்டு பிடிக்கிறார்.

உடல் நலகுறைவால் இறந்து போக சிறுவனின் வேண்டுகோள்படி இறந்து போன உடலோடு ஊருக்கும் வருகிறார்.

அப்பத்தாவின் சுயநலமான பாசமில்லாத மகள்கள், மருமகள் , குடிகார மகன் இவர்கள் பற்றி அறிகிறார்.

இந்த நிலையில் பிணமாக இருக்கும் அப்பத்தாவின் காதில் இருக்கும் – லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தண்டட்டி காணாமல் போகிறது

அப்பத்தாவின் மகன்”தண்டட்டியைக் கண்டுபிடித்துக் கொடுக்காவிட்டால் கொன்று விடுவேன்” என்று காவலரை மிரட்ட மற்றவர்களும் கிண்டல் கேலி செய்ய இந்த எதிர்பார்ப்புக்கும் அப்பாற்பட்டு ஒரு கனமான நெகிழ்வான சாதிய அரசியலை தண்டட்டியோடு சேர்த்து உருக்கி செதுக்கி தட்டி சிறப்பான படத்தைக் கொடுத்து இருக்கிறார் ராம் சங்கையா

முதல் பாதியில் வரும் தண்டட்டியைப் போன்றே கனமான அந்த ஃபிளாஷ்பேக்கும் யூகிக்க முடியாத அற்புதமான அதன் தொடர்ச்சியான இரண்டாம் பகுதிக் காட்சிகளுமே இந்தப் படத்திற்கு உயிரோட்ட ம்

ஒரு அறிவுப்பூர்வமான திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார் இயக்குனர் கோவக்கார காவலர் இந்த ஊரில் மட்டும் ஏன் எல்லோரிடமும் மென்மையாக நடந்து கொள்கிறார் அதே நேரம் ஒரு குறிப்பிட்ட சிலரை மட்டும் ஏன் வெறி கொண்டு அடிக்கிறார் என்பதை எல்லாம் பின்னால் யோசிக்கும் போது அடடே என்று ஆச்சர்யப்பட முடிகிறது

பசுபதியும் ரோகிணியும் தங்கள் கேரக்டர்களுக்கு உயிர் கொடுத்து நடிப்புக் கடலில் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளனர்.

பெண்கள் சண்டை போடுவது கட்டி உருளுவது போன்றவற்றை இன்னும் இயல்பாக காமெடியாக ரசனையாக உள்ளது.

இரண்டாம் பகுதியில் கொஞ்ச நேரம் படம் இழுத்தாலும் அது ரசிகர்கள் மன நிலையை புரிந்து சட்டென்று சுதாரித்துக் கொள்கிறது படம்

மகேஷ் முத்து சாமியின் ஒளிப்பதிவு கிராமியப் பரப்புகளை அழகாகக் காட்டுகிறது சாவு வீட்டின் சந்தடி நெரிசல்களையும் உணர வைக்கிறது . படத்தின் முக்கியமான காட்சிகள் ரசிகனின் இதயத்துக்குள் நுழைவதற்கான உணர்வுப் பாதையை தனது அர்த்தமுள்ள இசை மூலம் சிறப்பாகக் போட்டுக் கொடுத்துள்ளார் இசை அமைப்பாளர் சுந்தர மூர்த்தி.

சாவு வீட்டில் மாலைகளை தொங்க விட்டிருக்கும் வகையிலேயே கவனிக்க வைக்கிறார் கலை இயக்குனர் வீரமணி, சிவா நந்தீஸ்வரனின் படத்தொகுப்பு சீரியஸ் காட்சிகளில் சிறப்பு.

மொத்தத்தில் தண்டட்டி தரமான தங்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *