• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

திண்டுக்கல் அருகே கூலித் தொழிலாளி மின்சாரம் தாக்கி பலி..!

ByS.Ariyanayagam

Aug 4, 2026

திண்டுக்கல் அருகே தனியார் பள்ளியில் கூலி தொழிலாளி மின்சாரம் தாக்கி பலியானார்.

திண்டுக்கல், பழனி ரோடு, பாலம்ராஜக்காபட்டி அருகே உள்ள
தக்‌ஷஷீலா தனியார் பள்ளி வளாகத்தில் செட் அமைக்கும் பணியில் மாங்கரை, அம்மாபட்டி, கீழப்பட்டியைச் சேர்ந்த சண்முகம்(26) என்பவர் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்

இது குறித்து தகவல் அறிந்த தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் உலகநாதன் தலைமையில் சார்பு ஆய்வாளர் சக்திவேல் மற்றும் காவலர்கள் சண்முகத்தின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.