• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

கறி கோழி உற்பத்தி நிறுத்தம்…

Byகாயத்ரி

Apr 28, 2022

தமிழகம் முழுவதும் சுமார் 2.5 லட்சம் கறி கோழி விவசாயிகள் உள்ளனர். இவர்கள் உற்பத்தி செய்த கறி கோழிகளை சம்பந்தப்பட்ட கறி கோழி பண்ணையில் மொத்தமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கறிக்கோழி வளர்ப்பில் ஈடுபட்டு வந்த விவசாயிகள், மூலப்பொருட்களின் கடும் விலை உயர்வால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கறிக்கோழி வளர்ப்பில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் இடுபொருட்களின் விலை உயர்வால் முறைபடுத்தாத குறைந்தபட்ச வளர்ப்பு தொகை மற்றும் அடுக்கு விகிதம் மற்றும் தரமற்றது உள்ளிட்ட காரணங்களால், விவசாயிகள் தொடர்ந்து இன்னல்களை அனுபவித்து வருகின்றனர்.

இதனை தொடர்ந்து, தனியார் கறிக்கோழி நிறுவனங்களின் முறையற்ற இச்செயலை கண்டித்து, 29-4-2022-ஆம் தேதி முதல் முழுமையான உற்பத்தி நிறுத்தத்தில் தமிழகத்தில் உள்ள கறிக்கோழி பணியாளர்கள் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கறிக்கோழி வளர்ப்போர் விவசாயிகள் நல சங்கத்தின் சார்பில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் செய்து கறிக்கோழி விவசாயிகள் வேலை நிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

மேலும் இதற்கு முன், கறிக்கோழி மட்டுமே வளர்ப்பு தொகை மற்றும் இதர கறிக்கோழி வளர்ப்பு தொடர்பாக பிரச்சினைகளுக்கு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வந்துள்ளனர். ஆனால் கறிக்கோழி நிறுவனங்கள் முறையற்ற செயல்பாடு கண்டித்து தங்களுடைய வாழ்வாதாரத்தை காக்கும் பொருட்டு, வருகிற 29ம் தேதி முதல் முழுமையான வேலைநிறுத்தத்தில் தமிழகம் முழுவதும் உள்ள கறிக்கோழி பணியாளர்கள் ஈடுபட்டு இருக்கிறார். இந்நிலையில் அதே நேரத்தில் மாவட்ட நிர்வாகம் கோழி வளர்ப்பு நிறுவனங்களில் இருந்து விவசாயிகளுக்கு சுமுகமான நிலை ஏற்படுவதற்கு உதவுமாறு உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.