• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ஊரடங்கு நீட்டிப்பு? மருத்துவத்துறை அதிகாரிகள் நாளை ஆலோசனை

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் குறித்து மருத்துவத்துறை அதிகாரிகள் நாளை ஆலோசனை


தமிழகத்தில் ஜனவரி 6 ஆம் தேதி முதல் கட்டுப்பாடுகளுடன் கூடிய இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமையான இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில்,தமிழகத்தில் நாளையுடன் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவடைய உள்ள நிலையில்,ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக மருத்துவத்துறை அதிகாரிகள் நாளை ஆலோசனை மேற்கொள்கின்றனர்.


அதன்படி,சென்னை தலைமைச்செயலகத்தில் நாளை காலை 11 மணிக்கு நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்,பொதுசுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் உள்ளிட்ட உயர் மருத்துவ அதிகாரிகள் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தவுள்ளனர்.


பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்பவர்கள் விடுமுறை முடிந்து திரும்பி வரவுள்ள நிலையில்,அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு பிறப்பித்து குறித்தும் நாளை ஆலோசனை நடைபெறவுள்ளது.


மேலும்,குறைந்த பார்வையாளர்களுடன் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அனுமதி வழங்குவது குறித்த அறிவிப்புகள் நாளை வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து,ஆலோசனைக்கு பிறகு மருத்துவத்துறை அதிகாரிகள் முதல்வரை சந்தித்து விளக்கமளிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.