• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

கதறி அழுத குட்டி பாரதியார்.., வைரலாகும் வீடியோ..!

Byவிஷா

Aug 18, 2023

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது.
இவ்வாறு வைரலாகும் விடீயோக்களில், சில வீடியோக்கள் சிந்திக்க வைக்கும் வகையிலும் சில வீடியோக்கள் சிரிக்க வைக்கும் வகையிலும் இருக்கும். இந்நிலையில் இந்தியாவின் 77வது சுதந்திர தினம் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்பட்ட நிலையில் பள்ளி குழந்தைகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் என பலரும் தங்களது திறமைகளை வெளிக்காட்டி பேசினார். அதன்படி தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் மழலையர் பள்ளி ஒன்றில் சிறுவன் ஒருவன் அழுகையை அடக்க முடியாமல் பாரதியார் பற்றி பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. பாரதியார் பாடலை அழுதுகொண்டே அந்தச் சிறுவன் பாடினாலும், நம் கண்களையும் கசிய வைக்கிறது.