• Tue. Jan 13th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது…

Byகாயத்ரி

Jan 26, 2022

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங்கிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களில் ஒருவர் யுவராஜ் சிங். இவர் கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் ஹசில் கீச் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தில் சக கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பிரபலங்கள் நேரில் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.இந்நிலையில், யுவராஜ் சிங் மனைவி சமீபத்தில் கர்ப்பமாக இருந்த நிலையில் இன்று அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதை யுவராஜ் சிங் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ள நிலையில் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.