• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

திருப்பரங்குன்றத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தகோரி சிபிஎம் கையைழுத்து இயக்கம்

ByA.Tamilselvan

Jun 25, 2022

அடிப்படை வசதிகளை மேம்படுத்த கோரி திருப்பரங்குன்றத்தில் சிபிஎம் கட்சியின் சார்பில் மாபெரும் கையைழுத்து இயக்கம் நடைபெற்றது.
திருப்பரங்குன்றம் உலக புகழ் பெற்ற ஆன்மிகதளமாகும். தமிழ்கடவுள் முருக பெருமானின் முதல்படை வீடு என்பதால் வருடமுழுவதும் பக்தர்கள் அதிக அளவில் வந்து செல்லும் இடமாகும். மேலும் ஆன்மீக தளம் என்பதால் திருமணங்கள் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் நடைபெறுகின்றன.தற்போது மதுரை மாநகராட்சியின் ஒரு பகுதியாக திருப்பரங்குன்றம் உள்ளது. ஆனால் பொதுமக்களின் அடிப்படை வசதிகள் இன்றி பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்
திருப்பரங்குன்றம் 97,98,99 ஆகிய மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியாகும்.ஆனால் இப்பகுதியின் அடிப்படை வசதிகளை செய்துகொடுக்காமல் மதுரை மாநகராட்சி மெத்தனப்போக்கை கடைபிடித்து வருகிறது.இந்நிலையில் சிபிஎம் கட்சியின் சார்பில் கீழ் கண்ட கோரிக்கைகளை செயல்படுத்த கோரி கையைழுத்து இயக்கம் நடத்தி வருகின்றனர்.ரயில்வே சுரங்க நடைபாதை அமைத்திடுக,பேருந்துநிலையம் அமைக்கவேண்டும்,மார்கட் பகுதி பாலம் அமைந்தபகுதியில் கையகப்படுத்தபட்ட இடங்களுக்கு உரிய இழப்பீடு வழங்குக,மேலும் சர்வீஸ் ரோடு அமைத்து போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.பாதாள சாக்கடை வசதி, அரசுமருத்தவமனையை மேம்படுத்துதல்,தென்பரங்குன்றம் பூங்காவை சீரமைத்தல்,சுத்தமான குடிநீர் வசதிகளை உடனடிசெய்யவேண்டும் எனவும்,பல ஆண்டுகளாக அனைத்து சமய வழிபாட்டுதளங்களில் குடியிருக்கும் அனைவருக்கும் பட்டா வழங்குக,திருப்பரங்குன்றத்தில் சில பகுதிகளில் வீடு விற்க வாங்க உள்ள தடையை நீக்குவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அரசுக்கு எடுத்துச்சென்று நிறுவேற்ற வழியுறுத்தி நடைபெறும் மார்க்சிஸ்ட் கட்சியின் கையெழுத்து இயக்கத்திற்கு ஆதரவு தறுமாறு சிபிஎம் சார்பில் வலியுறுத்தபட்டுள்ளது.