• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

எண்ணும் எழுத்தும் திட்டம் – இன்று தொடக்கி வைக்கிறார் ஸ்டாலின்

ByA.Tamilselvan

Jun 13, 2022

கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் இன்று துவங்கியுள்ள நிலையில் மாணவர்களின் கற்றல்குறைபாட்டை போக்க எண்ணும் எழுத்தும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
மாணவர்களுக்கான கற்றல் இடைவெளியை குறைக்கும் வகையில், தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு எண்ணும் எழுத்தும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
அடுத்த கல்வியாண்டு முதல் 2025-ம் ஆண்டுக்குள் 8 வயதுக்குட்பட்ட அனைத்து மாணவர்களும் புரிந்துணர்வுடன் படிக்கவும், அடிப்படை கணித திறன்களை கொண்டிருப்பதை உறுதி செய்யவும், ‘எண்ணும் எழுத்தும்’ எனும் திட்டத்தை கல்வித்துறை கொண்டுவந்துள்ளது.
எண்ணும் எழுத்தும் திட்டத்திற்காக 30,000 ஆசிரியர்களுக்கு மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் மீண்டும் திறந்துள்ள நிலையில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது. திருவள்ளூர், அழிஞ்சிவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இன்று காலை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
மேலும், திட்டம் தொடர்பான வீடியோ, கைபேசி செயலி, திட்டப்பாடல் ஆகியவற்றை வெளியிடுகிறார். அத்துடன் ஆசிரியர் கையேடு, சான்றிதழ், கற்றல் கற்பித்தல் உபகரணம், புத்தகங்கள் ஆகியவற்றையும் முதல்வர் வழங்குகிறார்.