• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

நவ.25ல் மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலிங்

Byவிஷா

Nov 22, 2024

நவம்பர் 25ஆம் தேதியன்று எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் மருத்துவப் படிப்புகளுக்கான கவுன்சிலிங் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான நான்கு கட்ட கவுன்சிலிங் முடிந்துள்ளது. அதில் ஸ்டான்லி அரசு மருத்துவ கல்லூரியில் மாணவர் ஒருவர் உயிரிழந்ததை தொடர்ந்து உருவான காலியிடம் உட்பட ஏழு எம்.பி.பி.எஸ்., இடங்கள் மீதமுள்ளன. அதேபோல் 28 பி.டி.எஸ்., பல் மருத்துவ படிப்புக்கான இடங்களும் உள்ளன.
இதற்கிடையே காஞ்சி புரம் மாவட்டத்தில் புதிதாக துவக்கப்பட்ட அன்னை மருத்துவ கல்லூரிக்கு கூடுதலாக, 50 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கு தேசிய மருத்துவ ஆணையம் அனுமதித்துள்ளது.
இந்த, 50 இடங்கள் மற்றும் ஏற்கனவே காலியாக உள்ள, ஏழு எம்.பி.பி.எஸ், – 28 பி.டி.எஸ்., என, 85 மருத்துவ இடங்களுக்கான சிறப்பு கவுன்சிலிங், நவ. 25ம் தேதி முதல் டிச. 5ம் தேதி வரை நடைபெற உள்ளது.
சிறப்பு கவுன்சிலிங்கில் ஏற்கனவே இடங்கள் பெற்றவர்கள் உட்பட விண்ணப்பித்த அனைவரும் பங்கேற்கலாம் என, மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனரகம் தெரிவித்து உள்ளது.