• Thu. Mar 19th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

சீனாவில் மீன்களுக்கும் கொரோனா பரிசோதனை!

ByA.Tamilselvan

Aug 20, 2022
                             சீனாவில் கொரோனா தொற்று  அதிகரித்து வருவதால் மீன்களுக்கும் தொற்று பரவியிருக்குமோ என்ற நிலையில் அவைகளுக்கும் பரிசோதனை நடைபெறுகிறது.
                உலகையே ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும் கொரோனா தொற்றுக்கு காரணம் சீனா தான் என்று உலக நாடுகள்குற்றம் சாட்டி வருகின்றன.    உலக முழுவதும் கொரோனா தொற்று  வேகமாக பரவிய நிலையில் கடந்த சில மாதங்களாக கட்டுக்குள் இருக்கிறது . ஆனால் சீனா உள்ளிட்ட சில நாடுகளில் மீண்டும் வேகமெடுத்துள்ளதாக தகவல்கள் வருகின்றன. இந்நிலையில் சீனாவின் கடலோர மாகாணமான ஜியாமென்னில் 50 லட்சத்துக்கும்  அதிகமான மக்கள் மற்றும் கடல்வாழ் உயிரனங்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.  சீனாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு  அதிகரித்துள்ளதால்  பாதுகாப்பு  காரணமாக  கடலில் மீன்பிடித்து திரும்பும் மீனவர்களுக்கும் அவர்கள்  பிடித்து வரும்  மீன்களுக்கும் கோரோனா பரிசோதனை  செயய்வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.