கொரோனா தொற்றின் பேராபத்து அமெரிக்காவில் முடிவுக்கு வந்து விட்டதாக அதிபர் ஜோபைடன் அறிவிப்பு
உலகம் முழுவதும் பரவிய கொரோனா அமெரிக்காவில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவர தடுப்பூசி போன்ற நடவடிக்கைகளை அனைத்து நாடுகளும் எடுத்தன. இதனால் படிப்படியாக கொரானா தொற்றில் இருந்து உலக நாடுகள் மீண்டு வருகிறது. இந்த நிலையில் கொரனோ தொற்றின் பேராபத்து அமெரிக்காவில் முடிவுக்கு வந்து விட்டதாகவும், கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் அந்நாட்டு அதிபர் ஜோபைடன் அறிவித்து உள்ளார்.
அமெரிக்காவில் கொரோனா முடிவுக்கு வந்தது- ஜோபைடன் அறிவிப்பு
